பாரதம் உங்களால் பெருமை அடைகிறது.. அமீரகத்தில் இந்தியர்கள் மத்தியில் உற்சாகமாக பேசிய பிரதமர் மோடி
அபுதாபி: அபுதாபி ஜாயித் ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளியினர் 65 ஆயிரம் பேர் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, பாரதம் உங்களால் பெருமை அடைகிறது என்று பேசினார்.
இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையே நீண்ட காலமாக நட்புறவு உள்ளது. இருநாடுகளுக்கும் இடையே பரஸ்பரம் பல்வேறு ஒப்பந்தங்களும் அமலில் உள்ளது. இந்த நிலையில் தான், பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று ஐக்கிய அமீரகம் புறப்பட்டு சென்றார். ஐக்கிய அரபு அமீரகம் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரக அதிபரை சந்தித்து பேசினார்.

இன்று மாலை அபுதாபி ஜாயித் ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளியினர் 65 ஆயிரம் பேர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதவது:- நீங்கள் என் மீது காட்டிய அன்பு அபரிமிதமானது, எனக்காக நேரம் செலவிட்டு இங்கு வந்துள்ளீர்கள். 140 கோடி சகோதர சகோதிரிகளின் செய்தியுடன் நான் இங்கே வந்து இருக்கிறேன். பாரதம் உங்களால் பெருமை அடைகிறது என்பதே அந்த செய்தி.
இந்தியாவின் மூன்றாவது பெரிய கூட்டாளியாக ஐக்கிய அரபு அமீரகம் உள்ளது. இந்தியாவுக்கும் அமீரகத்துக்கும் இடையேயான கூட்டுறவு மேலும் வலுவடைந்து வருகிறது. தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளில் இரு நாடுகளின் கூட்டுறவு வலுவாக இருக்கிறது. சமூக கலாசார உறவுகளில் இந்தியாவும் அமீரகமும் சாதித்தது உலகிற்கு முன்மாதிரியாக உள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் விரைவில் யுபிஐ சேவை பயன்பாட்டுக்கு வரும். இந்த வசதி பரிவர்த்தனையை மேலும் எளிதாக்கும். உங்கள் குடும்பத்தினருக்கு எந்த தடங்கலும் இன்றி நீங்கள் பணம் அனுப்பலாம். இந்தியாவின் ஆற்றல் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. எனது 3-வது ஆட்சி காலத்தில் இந்தியாவை 3-வது பெரிய பொருளாதாரமாக மாற்ற திட்டமிட்டுள்ளேன். இந்தியா அதிவேகமாக மாறியிருப்பதை சமீபத்தில் இந்தியா சென்றவர்கள் பார்த்திருக்க முடியும்.
இந்தியாவை 2047 ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக்குவதான் ஒவ்வொரு இந்தியனின் இலக்காக இன்று உள்ளது. உலக அளவில் யாருடைய பொருளாதாரம் வேகமாக வளர்கிறது.. உங்கள் பாரத் தான் வேகமாக வளர்கிறது. உலகின் பால் உற்பத்தி அதிகம் செய்யும் நாடு நமது பாரதம். உலகில் 2-வது மிகப்பெரிய உற்பத்தி நாடும் நமது பாரதம் தான். முதல் முயற்சியிலேயே நிலவை தொட்டதும் நமது பாரத் தான். நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடும் இந்தியா தான். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 87 பக்தர்கள் மயக்கம்.. பெரும் பரபரப்பு! -
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications