அமெரிக்காவுடன் தோளோடு தோள் நின்று பணியாற்றுவதில் பெருமை - பிரதமர் மோடி
வாஷிங்டன்: அமெரிக்காவும் இந்தியாவும் தோளோடு தோள் நின்று இணைந்து பணியாற்றுவதை நாங்கள் பெருமையாக கருதுகிறோம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள மோடி வெள்ளை மாளிகை சென்றடைந்தார். அங்கு அதிபர் ஒபாமாவை சந்தி்த்த மோடி இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவுகள் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது இருநாட்டு உறவுகள், பாதுகாப்பு, அணுசக்தி ஒத்துழைப்பு, இணையதள குற்றங்களை தடுப்பது, மின்சக்தி உள்ளிட்ட பல விஷயங்கள் பேசப்பட்டன.

பேச்சுவார்த்தை குறித்து பிரதமர் மோடி கூறியதாவது: இருநாட்டு பாதுகாப்பு, அணுசக்தி ஒத்துழைப்பு, சைபர் குற்றங்களை தடுப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக பேசினோம். அமெரிக்காவுடன் தோளோடு தோள் நின்று இணைந்து பணியாற்றுவதை நாங்கள் பெருமையாக கருதுகிறோம்.
இந்தியாவில் 35 வயதுக்குள் 80 கோடி இளைஞர்கள் உள்ளனர். 80 கோடி இளைஞர்கள் அமெரிக்காவுடன் இணைந்து மனித சமூகத்துக்கு சேவையாற்ற உள்ளனர். இணையதள குற்றங்களை தடுப்பதில் இரு நாடுகளும் இணைந்து செயலாற்றும். ஜி 20 மாநாட்டில் நாங்கள் மீண்டும் சந்திக்க உள்ளோம். அந்த சந்திப்பில் பருவநிலை மாற்றம் தொடர்பான முடிவுகளை பேச உள்ளோம்.
என்.எஸ்.ஜி. குழுவில் இந்தியா பங்கு பெற அமெரிக்க அளிக்கும் ஆதரவுக்கு மோடி பாராட்டு தெரிவித்தார். கடந்த 2 ஆண்டுகளில் இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவு மேலும் வலுப்பெற்றுள்ளது எனவும் பிரதமர் மோடி கூறினார்.
இந்த சந்திப்பு குறித்து அதிபர் ஒபாமா கூறுகையில், பிரதமர் மோடியை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. இந்த சந்திப்பின் போது நான் இந்திய குடியரசு தினவிழாவில் கலந்து கொண்டது என் நினைவிற்கு வருகிறது. பிராந்திய பாதுகாப்பு குறித்து இணைந்து பணியாற்றுவது பற்றி விவாதித்தோம். அமெரிக்காவும் இந்தியாவும் நெருங்கிய பிணைப்புடன் உள்ளோம் என்றார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு வெளியுறவுத் துறை செயலாளர் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications