ஜப்பான் பிரதமருடன் மோடி சந்திப்பு.. நாளைய முத்தரப்பு மீட்டிங்கில் ட்ரம்பும் சேர்ந்துகொள்வார்!
டோக்கியோ: ஜப்பானின் ஒசாகாவில் நடைபெறும், ஜி 20 உச்சிமாநாட்டிற்கு, முன்னதாக பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை சந்தித்து பேசினார். அப்போது மும்பை-அகமதாபாத் நடுவேயான புல்லட் ரயில் திட்டம் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
இந்த சந்திப்பின்போது, பொதுத் தேர்தலில் வென்று மீண்டும் பிரதமராக பதவியேற்றதற்காக, மோடியை, அபே வாழ்த்தினார். விரைவில் இந்தியாவுக்கு வருவதாகவும், உறுதியளித்தார்.

ஜி 20 உச்சிமாநாட்டிற்கு முன்னதாக நடந்த, இந்தியா-ஜப்பான் சந்திப்பு பலனளிப்பதாக இருந்ததாகவும், இரு நாட்டு பிரதமர்களும் இருதரப்பு உறவுகள் குறித்து விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டதாகவும் வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது: தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் பிரச்சினையில் முந்தைய ஜி 20 கூட்டங்களில் பிரதமர் மோடியின் முன்முயற்சியை பிரதமர் அபே குறிப்பிட்டு பாராட்டினார். மேலும் ஜி 20 நாடுகள், அதன் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த பிரச்சினையை சமாளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
A friendship characterised by warmth and the promise of a bright future.
— PMO India (@PMOIndia) June 27, 2019
Prime Ministers @narendramodi and @AbeShinzo hold talks in Osaka, the first such meeting between these leaders since the start of Japan’s Reiwa era.
Many aspects of India-Japan relations were discussed. pic.twitter.com/59CiuBHZWA
மும்பை-அகமதாபாத் அதிவேக புல்லட் ரயில் மற்றும் வாரணாசியில் உள்ள மாநாட்டு மையம் குறித்தும் ஆலோசனை நடைபெற்றது. இது தொடர்பாக இரு தலைவர்களும் இந்த திட்டங்களில் நடைபெற்றுள்ள முன்னேற்றம் குறித்து அப்போது சுறுக்கமாக ஆய்வு செய்தனர்.
ஜப்பான், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான நாளைய முத்தரப்பு சந்திப்பின்போது, இவ்விரு பிரதமர்களும் மீண்டும் சந்திப்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications