பிரதமர் மோடிக்கு தேசிய விருது.. கானா நாடு அதிபர் கொடுத்த கவுரவம்.. பின்னணி என்ன?

Subscribe to Oneindia Tamil

அக்ரா: மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவிற்கு பிரதமர் மோடி சென்றுள்ளார். அங்கு பிரதமர் மோடியை பாராட்டி அந்த நாட்டின் தேசிய விருதான 'ஆபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார்' வழங்கப்பட்டது. உலகளாவிய தலைமைத்துவத்தை பாராட்டும் வகையில் மோடிக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளார். அதன்படி பிரதமர் மோடி கானா நாட்டுக்கு நேற்று சென்றார். அந்த நாட்டில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

narendra modi ghana award

அதன்பிறகு கானா நாட்டின் தலைநகர் அக்ராவில் பிரதமர் மோடி, கானா அதிபர் ஜான் மகாவாவை சந்தித்து பேசினார். அப்போது இருநாடுகள் இடையேயான கலாசாரம், வர்த்தக உறவை மேம்படுத்துவது பற்றி விவாதிக்கப்பட்டது.

இந்த வேளையில் பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய தேசிய விருது வழங்கப்பட்டது. அந்த விருதின் பெயர் ‛தி ஆபிசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார்' என்பதாகும். மோடியின் உலகளாவிய தலைமைத்துவத்தை பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டது. பிரதமர் மோடியின் கழுத்தில் விருது அணிவித்து கானா பிரதமர் ஜான் மகாவா பெருமைப்படுத்தினார்.

இதுபற்றி பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛கானா நாட்டின் உயரிய விருதான ‛தி தி ஆபிசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார்' எனும் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை இந்தியாவின் 140 கோடி மக்களின் சார்பில் ஏற்றுக்கொண்டேன். இந்த விருதை நாட்டின் இளைஞர்கள், கலாசாரம் மற்றும் இந்தியா - கானா நாட்டின் உறவுக்கு அர்ப்பணிக்கிறேன்'' என்றார்.

கடந்த 30 ஆண்டுகளாக இந்திய பிரதமர் யாரும் கானா நாட்டுக்கு செல்லவில்லை. இதனால் கடந்த 30 ஆண்டுகளுக்கு பிறகு கானா நாட்டுக்கு சென்ற முதல் பிரதமர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றிருந்த நிலையில் அவருக்கு அந்தநாட்டின் நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+