தோக் பிசின் மொழியில் திருக்குறள்- பப்புவா நியூ கினியில் வெளியிட்டு பிரதமர் மோடி பெருமிதம்!
போர்ட் மோரெஸ்பி: பப்புவா நியூ கினியா நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி தோக் பிசின் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி தமிழில் வெளியிட்ட ட்விட்டர் பதிவு: பப்புவா நியூ கினியாவில், டோக் பிசின் மொழியில் திருக்குறளை வெளியிட்ட பெருமை எனக்கும் பிரதமர் ஜேம்ஸ் மராப்பேவிற்கும் கிடைத்தது. குறள் ஒரு தலைசிறந்த படைப்பு, இது பல்வேறு துறைகளில் மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குகிறது. திருமதி சுபா சசிந்திரன், சிறந்த பன்மொழி அறிஞராவார்.

குறளை தோக் பிசின் மொழியில் மொழி பெயர்க்க எடுத்த முயற்சிக்காக மேற்கு புதிய பிரிட்டன் மாகாண ஆளுநர் @pngsasi மற்றும் திருமதி சுபா சசீந்திரன் ஆகியோரைப் பாராட்டுகிறேன். ஆளுநர் சசிந்திரன் தனது பள்ளி படிப்பை தமிழில் கற்று தேர்ந்துள்ளார்.
பப்புவா நியூ கினியாவில், டோக் பிசின் மொழியில் திருக்குறளை வெளியிட்ட பெருமை எனக்கும் பிரதமர் ஜேம்ஸ் மராப்பேவிற்கும் கிடைத்தது. குறள் ஒரு தலைசிறந்த படைப்பு, இது பல்வேறு துறைகளில் மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குகிறது. pic.twitter.com/I9eHxw5Ten
— Narendra Modi (@narendramodi) May 22, 2023
இந்திய-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்புக் கூட்டமைப்பின் 3-வது உச்சிமாநாட்டின் ஒருபகுதியாக, போர்ட் மோர்ஸ்பி-யில், பிரதமர் நரேந்திர மோடி, பப்புவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மராப்பேவுடன் இருநாட்டு உறவு குறித்து ஆலோசனை மேற்கொண்டார். 3-வது உச்சி மாநாட்டை இணைந்து நடத்துவதற்காகவும், தமக்கு உற்சாக வரவேற்பு அளித்தமைக்காகவும், அந்நாட்டுப் பிரதமர் திரு. ஜேம்ஸ் மராப்பேவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். சுகாதாரம், திறன் மேம்பாடு, தகவல் தொழில்நுட்பம், வர்த்தகம் மற்றும் முதலீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு பரஸ்பர நல்லுறவை மேலும் பலப்படுத்துவது குறித்து விவாதித்தனர். காலநிலை மாறுபாடு சார்ந்த விஷயங்கள் மற்றும் இருநாடுகளின் மக்களுக்கிடையே தொடர்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசித்தனர். பசிபிக் தீவு நாடுகளின் விருப்பங்களுக்கு மரியாதை மற்றும் முன்னுரிமை அளிப்பதற்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும் என பிரதமர் திரு.நரேந்திர மோடி உறுதிபட தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications