பிரதமர் மோடி ஓபன் டாக்.. தென் சீன கடல் விரிவாக்கத்தில் பேச்சுவார்த்தை ஒன்றே தீர்வு.. கவனித்த நாடுகள்
டோக்கியோ: ஜப்பானில் நடைபெற்று வரும் ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றிருந்த நிலையில், தென் மற்றும் கிழக்கு சீனக்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை தீர்க்க பேச்சுவார்த்தை தான் சிறந்த தீர்வு என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
சர்வதேச அளவில் சீனா தவிர்க்க முடியாத நாடாக வளர்ந்து வந்திருக்கிறது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இருக்கும் சீனா, தற்போது தனது ராணுவ பலத்தையும் அதிகரித்து வருகிறது. ஒரு காலத்தில் சோவியத் யூனியன் இந்த உலகத்தை கட்டி ஆண்டது போல அடுத்த 100 ஆண்டுகளுக்கு சீனாவின் ஆதிக்கம் உலகம் முழுவதும் இருக்கும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கணித்துள்ளனர். அதற்கேற்றார் போலவே சீனா தனது ராணுவத்தை விரிவுபடுத்தி வருகிறது.

ஏற்கனவே, இந்தியாவுடனான எல்லை பிரச்னையில் சீனா கொஞ்சம் ஓவராகவே நடந்து வருகிறது. கடந்த 2020ம் ஆண்டு கிழக்கு லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய எல்லை பகுதியை ஆக்கிரமிக்க முயன்றபோது இந்திய வீரர்கள் எதிர்த்து சண்டையிட்டனர். இதில் இரு தரப்பிலும் உயிர் சேதங்களை ஏற்படுத்தியது. இந்நிலையில், தற்போது தெற்கு மற்றும் கிழக்கு சீன கடலில் சீனா தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்ட முயன்று வருகிறது.
இப்படியான சூழலில் தற்போது ஜப்பானில் ஜி7 உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா தரப்பிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றிருந்தார். அப்போது அந்நாட்டு செய்திதாள் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், சீனாவின் கடல் ஆக்கிரமிப்பு குறித்து பேசியுள்ளார். அதாவது, "தென் மற்றும் கிழக்கு சீன கடலில் சீனாவின் ராணுவ விரிவாக்க சர்ச்சையை பொறுத்த அளவில் இறையாண்மைக்கு மதிப்பளித்து, சர்ச்சைகளை அமைதியான முறையில் தீர்க்க முடியும் என இந்தியா நம்புகிறது. இதைத்தான் சர்வதேச சட்டமும் சொல்கிறது.
சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் கடல்சார் பிரச்னைகளை அமைதியான முறையில் தீர்ப்பதை ஊக்குவிக்கும் அதே வேளையில், இந்தியா மனது இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் கறாராக இருக்கும்" என்றும் பிரதமர் மோடி கூறியிருக்கிறார். மேலும், "வங்க தேசத்தின் கடல் மற்றும் நிலம் சார் பிரச்னைகளை இந்தியா அமைதியான முறையில் தீர்த்து வைத்திருக்கிறது" என்றும் கூறியுள்ளார். கடந்த சில நாட்களாக தென்சீனக் கடலில் சீனாவின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்த பிரச்னை சமீபத்தில் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. அதாவது பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் சீனா தனது ரோந்து கப்பலை அனுப்பியுள்ளது.
இதிற்கு பிலிப்பைன்ஸ் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் அதுவும் தனது ரோந்து கப்பலை அனுப்பியது. இதனால் இருண்டு கப்பல்களும் மோதுவது போல வந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அந்நாட்டு கப்பல் பின்வாங்கிக்கொண்டது. இந்த விவகாரம் சர்வதேச நாடுகள் சீனாவுக்கு கண்டனம் தெரிவித்திருந்தன. இது குறித்து அமெரிக்கா தரப்பில் பேசி ஜோ பைடன் பிலிப்பைன்ஸ் கப்பல் மீது கையை வைத்தால் அதை சரி செய்ய அமெரிக்கா எந்த எல்லைக்கும் போகும் என்று கூறியிருந்தார். ஏற்கனவே உக்ரைன் போருக்கு அமெரிக்காதான் ஆயுதங்களை சப்ளை செய்து வருகிறது. எனவே பிலிப்பைன்ஸ்க்கும் அமெரிக்கா ஆயுதம் சப்ளை செய்ய தயங்காது என்பதால் சீனா இந்த விஷயத்தில் கவனமாக இருந்து வருகிறது.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications