For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுவாமி விவேகானந்தர் இந்தியாவின் ஆன்மா... கோலாலம்பூரில் மோடி உரை

Google Oneindia Tamil News

கோலாலம்பூர்: மலேசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, பெட்டாலிங் ஜெயா பகுதியில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் சுவாமி விவேகானந்தரின் திரு உருவச்சிலையை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற தத்துவத்தை நமக்கு போதித்த சுவாமி விவேகானந்தர் இந்தியாவின் ஆன்மாவாக உள்ளார். விவேகானந்தர் என்பது ஒருநபரின் பெயர் மட்டுமல்ல அது மக்களின் மனதில் ஒரு சக்தியாகவும், நம்பிக்கையாகவும் உள்ளது. இன்று ஆசியான் மாநாடுகளில் பேசப்படும் 'ஒன்றுபட்ட ஆசியா' என்ற கொள்கையை விவேகானந்தர்தான் முதன்முதலில் வலியுறுத்தினார்.

PM MOdi unveils Swamy Vivekanandha statue in Malaysia

வேதங்கள் தொடங்கி விவேகானந்தர்வரை இந்தியாவின் கலாச்சாரம் மிகவும் பழைமையானதாகவும், வளமானதாகவும், போற்றத்தக்கதாகவும் இருந்துவந்துள்ளது. இந்தியாவின் கல்லாச்சாரம் மற்றும் ஆன்மாவின் அடையாளமாக விவேகானந்தார் திகழந்து வந்தார். அவர் தனது ஆண்மீகப்பாதையை மேற்கொண்ட போது எந்த மதத்தையும், குருவையும் சாராமல் சத்தியத்துக்கான தேடலில் ஈடுபட்டார். நாம் யார் என்ற அடையாளத்தை நாம் தக்கவைத்துக் கொள்ள முன்வந்தால் விவேகானந்தரின் சிந்தனைகளை நமக்குள்ளும் வளர்த்துக் கொள்ளலாம்.

ஒருமுறை அவர் கொல்கத்தா நகருக்கு வந்திருந்தபோது, அவரிடம் சில இளைஞர்கள் ‘கடவுளை எப்படி பார்ப்பது?' என்று கேள்வி எழுப்பினார்கள். போய் கால்பந்து விளையாடுங்கள், நீங்கள் விளையாடும்போது முழு ஊக்கத்துடனும், உத்வேகத்துடனும் விளையாடினால் உங்களால் கடவுளை காண முடியும் என்று பதில் அளித்தார்.

மனதை ஒருமுகப்படுத்துவதன் மூலம் கடவுளைக் காண முடியும் என்று அவர் நம்பினார், இதனையே உலகிற்கும் போதித்தார். மனிதத்துக்கு ஆற்றும் தொண்டு தெய்வத்துக்கு ஆற்றும் தொண்டாகும் எனவும் அவர் வலியுறுத்தி வந்தார்.

English summary
Prime Minister Modi Unveils Swamy Vivekanandha statue in Kolalmbur, Malaysia at Sri Ramakrishna mutt.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X