ஒதுக்குப்புறத்தில் பயங்கரம்.. கான்ஸ்டபிளின் காது, மூக்கு, உதடுகளை அறுத்து வீசிய நண்பர்.. என்ன காரணம்
கான்ஸ்டபிள் மூக்கு, காது, உதடுகளை அறுத்துள்ளார் அவரது நண்பர்
லாகூர்: தன் மனைவியுடன் கள்ள உறவு வைத்திருந்தவரின் காது, மூக்கு, உதடுகளை அறுத்த கணவரை, பாகிஸ்தான் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
லாகூரிலிருந்து 200 கிமீ தொலைவில் உள்ளது ஜாங் என்ற மாவட்டம்.. இங்கு ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது.
அந்த பகுதியில் வசித்து வருபவர் முஹம்மது இப்திகார்.. இவரது நண்பர் கான்ஸ்டபிள் காசிம் ஹயாத்.. தன்னுடைய மனைவியுடன் கான்ஸ்டபிள் கள்ள உறவு வைத்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

நண்பர்கள்
இதனால், ஆத்திரமடைந்த இப்திகார், காசிம் ஹயாத்தை, கத்தியால் குத்த முடிவு செய்துள்ளார்.. அதற்காக தன்னுடைய நண்பர்களுக்கு போனை போட்டு வரவழைத்துள்ளார்.. மொத்தம் 12 நண்பர்கள் வந்துள்ளார்கள்.. இதற்காகவே ஹயாத்தின் டியூட்டி என்ன, எப்போது வீடு திரும்புவார் என்று கண்காணித்து வந்துள்ளனர்.. அதன்படி, சம்பவத்தன்று, டியூட்டி முடித்துவிட்டு, கான்ஸ்டபிள் வீட்டுக்கு வந்து கொண்டிருக்கும்போது, அவரை இவர்கள் அனைவரும் சேர்ந்து கடத்தி சென்றுள்ளார்...

உதடுகள்
ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு, தூக்கி சென்று காசிம் ஹயாத்தை கடுமையான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அவரது உடல் உறுப்புகளை கூர்மையான கத்தி முனையால் வெட்டியதாகவும் கூறப்படுகிறது. அதாவது, ஹயாத்தின் காது, மூக்கு, உதடுகளை தனித்தனியாக அறுத்துள்ளனர்.. இதனால் ரத்தம் கொட்டி கான்ஸ்டபிள் வலியால் அலறி துடித்துள்ளார்.. அந்த சத்தம் கேட்டு, அந்த வழியாக சென்றவர்கள், விரைந்து வந்து, அவரை மீட்டு, ஜாங் மாவட்ட தலைமையக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்..

கத்திக்குத்து
ரத்தம் அதிக அளவு வெளியேறியதாலும், உடம்பில் பல இடங்களில் கத்திக்குத்து விழுந்துள்ளதாலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.. இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் சொல்லும்போது, காசிமுக்கு, இப்திகர் மனைவியுடன் கள்ளத் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, தான் எடுத்த ஆபாச படங்களை காட்டி அந்தப் பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார்... இது பற்றி தெரியவந்ததும், இப்திகர் சமீபத்தில் காசிம் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.

மாயம் - காணவில்லை
ஆனால் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை... பொறுத்து பொறுத்து பார்த்த இப்திகர், வேறு வழியில்லாமல், நண்பர்களுடன் சேர்ந்து காசிமை கடத்தி, அவருடைய காது, மூக்கு, உதடுகளை வெட்டி சித்ரவதை செய்துள்ளார். போலீசார், காசிமை கண்டுபிடித்தபோது மிக மோசமான நிலையில் இருந்தார்... தற்போது மருத்துவமனையில் உள்ள அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்" என்றார்... இப்போது இப்திகாரை இப்திகாரையும், அவரது கூட்டாளிகளையும் காணவில்லை என்பதால், போலீசார் அவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
-
போதையில் பாகிஸ்தான் அமைச்சர் செய்த காரியம்? மிக பெரிய போர் வெடித்திருக்கும்.. அலட்சியத்தின் உச்சம் -
மினாப் 168: ரத்தத்தில் மூழ்கிய புத்தகம், ஷூ, ஸ்கூல் பேக்.. அமெரிக்காவை நடுங்க வைக்கும் ஈரானின் செயல்! -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
பாகிஸ்தானுக்கும், அமெரிக்காவுக்கும் பல்பு கொடுக்கும் ஈரான்.. ஒரே கண்டிஷன் - டிரம்ப்-க்கு அடுத்த செக் -
அமெரிக்கா - ஈரான் மீட்டிங்: மீடியேட்டராக இருக்கும் பாகிஸ்தானுக்கு என்ன லாபம்..? பெரிய லிஸ்ட் இருக்கு -
வளைகுடா நாடுகளில் அமைதி.. இந்தியர்களுக்கு பெரிய நிம்மதி! ஈரான் எடுத்த நடவடிக்கை! -
ஈரான் விவகாரத்தில் மத்தியஸ்தம்.. பாகிஸ்தானை நம்ப முடியாது! ஓபனாக சொன்ன இஸ்ரேல் -
லெபனானில் அமைதி திரும்பும் வரை பேச்சுவார்த்தை கிடையாது.. டிரம்பை சாய்த்த ஈரான்.. மிரண்ட பாகிஸ்தான் -
ஒப்பந்தம் ஏற்படாமல் போகட்டு, அப்புறம் இருக்கு.. பேச்சுவார்த்தைக்கு முன்பே ஈரானை மிரட்டும் அமெரிக்கா -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி












Click it and Unblock the Notifications