அதிகாலை நில நடுக்கம்! அதிர்ந்து குலுங்கிய சாலமன் தீவுகள்! கடலோர பகுதிகளில் சுனாமி அபாய எச்சரிக்கை!
ஹோனியாரா : பப்புவா நியூ கினியா அருகில் சுமார் ஆயிரம் தீவுகளைக் கொண்ட நாடு சாலமன் தீவு. அங்கு இன்று காலை 7.33 மணியளவில் தெற்கு மலாங்கா பகுதிகளில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், ரிக்டர் அலகில் 7.00 ஆகப் பதிவாகியுள்ளது.
உலக அளவில் கடந்த சில நாட்களாக நில நடுக்கங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நேபாளத்திலும் அதனைத் தொடர்ந்து டெல்லி, நொய்டா உள்ளிட்ட சில பகுதிகளில் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டன.
இந்த நிலையில் நேற்று இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட விபத்தில் ஏராளமானோர் படுகாயம் அடைந்த நிலையில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தோனேசியா
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் நேற்று காலை பயங்கர நிலநடுக்கம் பதிவாகி இருக்கிறது. 10 கிலோ மீட்டர் பூமியின் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும். சுமார் 5.6 என ரிக்டர் அளவுகோலில் பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக நகரின் பல இடங்களில் அதிர்வுகள் உணரப்பட்டது. கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானதோடு நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக சியான்சூர் கடுமையாக பாதிக்கப்பட்டதோடு நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து தரைமட்டமானதால் பொதுமக்கள் பலர் ஈடுபாடுகளில் சிக்கினார்.

நிலநடுக்கம்
தற்போது அந்த நாட்டில் பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில் 700 பேர் காயமடைந்ததாகவும் 62 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் அந்தப் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அதே நேரத்தில் இந்தோனேசியா தலைநகரான ஜகார்தாவில் நிலநடுக்கத்தின் பாதிப்புகள் உணரப்படவில்லை எனவும், மக்கள் பாதுகாப்பாக இருப்பதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது.

சாலமன் தீவு
இந்நிலையில் சாலமன் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பப்புவா நியூ கினி அருகில் சுமார் ஆயிரம் தீவுகளைக் கொண்ட நாடு சாலமன் தீவு. அங்கு இன்று காலை 7.33 மணியளவில் தெற்கு மலாங்கா பகுதிகளில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அலகில் 7.00 ஆகப் பதிவானது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள வீடுகள் அதிர்ந்தன. அதிலிருந்த பொருட்களும் சிதறி விழுந்தன.

சுனாமி எச்சரிக்கை?
இதனால் அப்பகுதியில் வசித்த மக்கள் பாதுக்காப்பான இடங்களை நோக்கி நகர்ந்து வருகின்றனர். இந்தோனேசியாவில் பதிவானதை விட அதிக அளவு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் உயிர்ச் சேதம், பொருட்சேதம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை, மேலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. சாலமன் தீவு மற்றும் பப்புவா நியூ கினியாவின் சில கடலோர பகுதிகளில் சுமார் 3 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பியதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications