இன்னிக்கு தான் சம்பவமே இருக்கு! செஸ் ஃபைனலில் ‘நம்பர் 1’ கார்ல்செனுடன் மோதும் நம்ம ஊர் பிரக்ஞானந்தா!

Subscribe to Oneindia Tamil

பாகு: FIDE உலகக் கோப்பை செஸ் போட்டியின் அரையிறுதியில் இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா உலகின் நம்பர் 3 வீரர் ஃபேபியானோ கருவானாவை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இன்று இறுதிப்போட்டியில் உலகின்'நம்பர் ஒன்' வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்செனுடன் பிரக்ஞானந்தா மோதுகிறார்.

அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில் உலகக்கோப்பை செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் அரையிறுதிப் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த 18 வயது கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா நேற்று நடைபெற்ற உலகின் நம்பர் 3 வீரரான ஃபேபியானோ கருவானாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில், 1-1 என்ற கணக்கில் சமன் செய்தார்.

Praggnanandhaa shocks Caruana, meets Carlsen today in final

இதையடுத்து 4 டை பிரேக்கரின் முடிவில் 3.5-2.5 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார் பிரக்ஞானந்தா. இன்று நடைபெறும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொள்ள உள்ளார் பிரக்ஞானந்தா.

நேற்று நடைபெற்ற அரை இறுதியில் பேபியானோ கருவானாவை வெற்றி பெற்றதன் மூலம், புகழ்பெற்ற வீரர் விஸ்வநாதன் ஆனந்தைத் தொடர்ந்து போட்டியின் உச்சநிலை மோதலில் நுழைந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றார்.

20 ஆண்டுகள் கழித்து செஸ் உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய வீரர் என்ற பெருமையையும், உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய மிகக்குறைந்த வயதுடையவர் என்ற பெருமையையும் ஒருசேரப் பெற்றுள்ளார் பிரக்ஞானந்தா.

இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள பிரக்ஞானந்தா, "இந்தப் போட்டியில் மேக்னஸ் கார்ல்சன் உடன் விளையாடுவேன் என்று நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் இறுதிப்போட்டியில் மட்டுமே அவரை சந்திக்கும் வகையில் போட்டி ஷெட்யூல் அமைந்திருந்தது. நான் இறுதிப் போட்டிக்கு வருவேன் என்று எதிர்பார்க்கவில்லை... என்னால் முடிந்ததைச் செய்ய முயற்சிப்பேன்" என்று பணிவுடன் தெரிவித்துள்ளார்.

Praggnanandhaa shocks Caruana, meets Carlsen today in final

ஐந்து முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த், ட்விட்டரில் பிரக்ஞானந்தாவை பாராட்டி, வாழ்த்தியுள்ளார். ஃபிடே உலகக் கோப்பையில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதன் மூலம் அடுத்த கேண்டிடேட் செஸ் போட்டியில் பிரக்ஞானந்தாவும் இடம்பெறுவார். இந்த கேண்டிடேட் போட்டியில் வெற்றி பெறும் வீரர் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் விளையாடும் வாய்ப்பை பெறுவார்.

பிரக்ஞானந்தா இன்று நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில் உலகின் 'நம்பர் ஒன்' வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்செனுடன் (நார்வே) மோதுகிறார். இறுதிச்சுற்றும் இரு ஆட்டங்களை கொண்டது. இது சமன் ஆனால் டை பிரேக்கருக்கு செல்லும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+