நிலநடுக்கங்களின் நாடு.. ஒரே இரவில் 304 பேரை பறிகொடுத்த கரிபீயன் தேசம் "ஹைதி".. அதிர்ச்சி பின்னணி!
போர்ஸ் ஆவ் பிரின்ஸ்: கரீபியன் தேசமான ஹைதியில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்தில் 304 பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அடுத்தடுத்து நிலநடுக்கங்களையும், அரசியல் மோதல்களையும் எதிர்கொண்டு வரும் ஹைதி நாட்டு மக்கள் தற்போது சோகத்தில் மூழ்கி உள்ளனர்.
Recommended Video
கொலம்பஸ் உலக நாடுகளை கண்டுபிடிப்பதற்காக பயணம் மேற்கொண்டு 1492 டிசம்பர் 5ம் தேதி தீவு ஒன்றில் இறங்கி இந்தியாவை கண்டுபிடித்துவிட்டேன் என்று கத்தினார்.. அதன்பின் இல்லை இல்லை இது இந்தியா கிடையாது சீனா என்று கூறினார். அதன்பின் கடைசியாக அங்கிருந்த மக்களிடம் பேசிய பின்புதான்தான் கொலம்பஸ் முதலில் கண்டுபிடித்தது இந்தியாவும் இல்லை சீனாவும் இல்லை ஹைதி என்ற குட்டி தேசம் என்பது தெரிய வந்தது. இந்தியாவை கொலம்பஸ் அதன்பின் கண்டுபிடித்தது வேறு கதை.
கியூபாவிற்கும் கீழே, டொமினிக் குடியரசு நாட்டுக்கு அருகே ஹிஸ்பானியோலா தீவில் இருக்கும் குட்டி தேசம்தான் இந்த ஹைதி. கரிபியன் கடலில் அமைந்து இருக்கும் நாடுகளில் ஹைதியும் ஒன்றும். அமெரிக்காவின் கண்காணிப்பில் இருக்கும் கரீபிய தேசங்களில் இதுவும் ஒன்று. மொத்தம் 27,750 சதுர கிலோ மீட்டர் மட்டுமே பரப்பளவு கொண்ட இந்த நாட்டின் மக்கள் தொகை 1.2 கோடி மட்டுமே. ஆனால் கரிப்பீயன் தீவுகளில் உள்ள நாடுகளில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இது உள்ளது.

ஹைதி
கடும் வறுமை, ஊழல் மேல் ஊழல், மக்களின் ஏழ்மை, மோசமான ஆட்சியாளர்கள், தொடர் போராட்டங்கள், அமெரிக்காவுடன் எல்லை பிரச்சனை என்று இந்த ஹைதி நாடு எதிர்கொள்ளாத பிரச்சனைகளே கிடையாது. ஐநாவின் மனித வள ரிப்போர்ட், கல்வி ரிப்போர்ட், சுகாதார ரிப்போர்ட் என்று எதை எடுத்து பார்த்தாலும் அதில் கடைசியாக இருக்கும் நாடாக ஹைதி வலம் வந்து கொண்டு இருக்கிறது. அரசியல் பிரச்சனைதான் ஒரு பக்கம் என்றால் இயற்கையும் ஹைதிக்கு எதிராகவே இத்தனை நாட்கள் இருந்து வந்துள்ளது. அடுத்தடுத்த இயற்கை சீற்றங்களால் ஹைதி நாடு நிலை குலைந்து போய் உள்ளது.

நிலநடுக்கம்
கடந்த 2010 ஜனவரி 12ம் தேதி ஹைதியில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. மொத்தம் 7 மெகா மெக்னீடியுட் அளவில் இந்த கடுமையான நிலநடுக்கம் பதிவானது. வரிசையாக 52 நிலநடுக்கங்கள் ஒரு மணி நேரத்தில் 4.5 ரிக்டர் அளவில் இங்கு பதிவானது. அதை தொடர்ந்து 7 மெகா மெக்னீடியுட் நிலநடுக்கம் பதிவானது. மனித குல வரலாற்றில் ஏற்பட்ட மோசமான நிலநடுக்கங்களில் ஒன்றாக இந்த நிலநடுக்கம் பார்க்கப்படுகிறது. அந்த நாட்டின் தலைநகரான போர்ஸ் ஆவ் பிரின்ஸ் அருகே இந்த கொடூரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. வரிசையாக 52 நிலநடுக்கம் ஏற்பட்டு அதன்பின் ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அதன் பாதிப்பு எப்படி இருக்கும் என்று யோசித்து பாருங்கள்.

மோசமான பாதிப்பு
அப்படி ஒரு மோசமான பாதிப்பைதான் ஹைதி நாடு அன்று எதிர்கொண்டது. மொத்தம் 3 லட்சம் பேர் இந்த நிலநடுக்கத்தில் பலியானதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஆனால் உண்மையான பலி எண்ணிக்கை இதை விட பல மடங்கு அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தில் 3 லட்சம் பேருக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். இன்னும் பல்வேறு அரசியல் காரணங்களால் இவர்களுக்கு வீடுகள் வழங்கப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட பலர் இன்னும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவில்லை. அவ்வளவு மோசமான வாழ்க்கை சூழ்நிலையில் இவர்கள் உள்ளனர்.

மீண்டும்
இந்த நிலநடுக்கத்தின் சுவடுகள் இன்னும் மறையாத நிலையில்தான் ஹைதியில் இன்னொரு பெரிய நிலநடுக்கம் நேற்று பின்னிரவில் ஏற்பட்டுள்ளது. ஹைதி நேரப்படி இன்று அதிகாலை நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கமும் அதே தலைநகரான போர்ஸ் ஆவ் பிரின்ஸ் அருகில்தான் ஏற்பட்டுள்ளது. மொத்தம் 7.2 ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. நீண்ட நேரம் நீடித்த நிலநடுக்கம் காரணமாக வீடுகள், கட்டிடங்கள், ஹோட்டல்கள் இடிந்து விழுந்துள்ளன.

எத்தனை பேர்
அதிகாரபூர்வமாக இந்த நிலநடுக்கத்தில் மொத்தம் 304 பேர் பலியாகி உள்ளனர். அதோடு இந்த கொடுமையான நிலநடுக்கத்தில் 1800 பேர் காயம் அடைந்துள்ளனர். 2000க்கும் அதிகமான நபர்கள் காணவில்லை. இவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ஹைதியில் எமர்ஜென்சி கொண்டு வருவதாக அதிபர் ஏரியல் ஹென்றி அறிவித்துள்ளார். தலைநகரத்தில் இருந்து 12கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் பதிவானது. முதலில் இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதன்பின் இது வாபஸ் வாங்கப்பட்டுள்ளது.

அணைகள்
இங்கு இருக்கும் சிறிய அணைகள், நீர் தேக்கங்கள் உடைந்த காரணத்தால் சில கிராமங்களுக்குள் தண்ணீரும் வந்துள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் அஞ்சப்படுகிறது. 200க்கும் அதிகமான கட்டிடங்கள் இடிந்துள்ளதால் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 2010 நிலநடுக்கத்தில் இருந்தே அந்த நாடு இன்னும் மீண்டு வராத நிலையில் அதே போன்றதொரு மோசமான நிலநடுக்கம் மீண்டும் அங்கு மக்களை முடக்கி போட்டுள்ளது.

கொலை
அதிலும் இந்த நிலநடுக்கம் அந்நாட்டு அதிபர் ஜோவ்னல் மோய்ஸ் கொலை செய்யப்பட்டு ஒரே மாதத்தில் ஏற்பட்டுள்ளது. இவரின் ஆட்சிக்கு எதிராக மக்கள் கடுமையாக குரல் கொடுத்து வந்த நிலையில் அரசியல் நிலையற்ற தன்மை நிலவி வந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் அதிபர் ஜோவ்னல் மோய்ஸ் கொல்லப்பட்டு பிரதமர் ஏரியல் ஹென்றி ஆக்டிங் அதிபராக பதவி ஏற்றார். அங்கு முறையான அரசு பதவி ஏற்கும் முன் மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டு 304 பேர் பலியாகி உள்ளனர். இந்த நாட்டிற்கு போதிய உதவிகளை வழங்குவதாக அமெரிக்க அதிபர் பிடன் உறுதி அளித்துள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications