Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோடி முன்னால் செல்ல.. பின்னாடியே வந்த ஜி ஜின்பிங்! பிரிக்ஸில் நடந்த சுவாரசியம்.. கவனிச்சீங்களா?

Subscribe to Oneindia Tamil

ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்பிரிக்காவிலுள்ள ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்று வரும் 'பிரிக்ஸ்' உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன், பிரதமர் நரேந்திர மோடி சுருக்கமாக கலந்துரையாடியுள்ளார்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ள 'பிரிக்ஸ்' நாடுகளின் கூட்டமைப்பின் 15-வது உச்சி மாநாடு ஜோகன்னஸ்பர்கில் நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று நெருக்கடி காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக இந்த மாநாடு வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நடந்து வந்தது. இந்நிலையில் 2019ம் ஆண்டுக்கு பின்னர் முதல்முறையாக இம்மாநாட்டில் தலைவர்கள் நேரடியாக பங்கேற்றுள்ளனர்.

Prime Minister Narendra Modi and Chinese President Xi Jinping briefly spoke at the BRICS summit

இந்த மாநாட்டில் சிறப்புரையாற்றியிருந்த பிரதமர் நரேந்திர மோடி, "உலக பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்ச்சி கண்டுவருகிறது. இந்தியா விரைவில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும். உலக வளர்ச்சிக்கான இன்ஜினாக இந்தியா விளங்கும். இந்தியாவில் ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்த பிறகு முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. யுபிஐ தொழில்நுட்பம் இன்று தெருவோர வியாபாரிகளால் பயன்படுத்தப்படுகிறது.

சூரிய ஆற்றல், காற்றாலை ஆற்றல், மின்சார வாகனங்கள் உள்ளிட்ட துறைகளில் இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்ற நாங்கள் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த வளர்ச்சி தெற்கில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்" என்று பேசியிருந்தார். இந்நிலையில், இரண்டாவது நாளான இன்று சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் சுருக்கமாக கலந்துரையாடியுள்ளார். கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்ற ஜி20 விருந்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும், சீன அதிபர் ஜி ஜின்பிங் கடைசியாக ஒன்றாக சந்தித்து பேசிக்கொண்டனர்.

Prime Minister Narendra Modi and Chinese President Xi Jinping briefly spoke at the BRICS summit

ஆனால் அடுத்த மாதமே லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதல் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு பாதிக்கப்பட்டது. இதன் பின்னர் அடுத்து வந்த காலகட்டங்களில் மத்திய அரசு சீனா விஷயத்தில் கறார் காட்டி வந்தது. இப்படி இருக்கையில் இந்த மாநாட்டில் இருநாட்டு தலைவர்களும் சந்தித்துக்கொள்வார்களா? என்று கேள்வி எழுந்திருந்தது. இந்த எதிர்பார்ப்பு முழுமையாக பூர்த்தியாகவில்லை என்றாலும், இன்று மாநாட்டின் தொடக்கத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி பேசிக்கொண்டே முன்னால் சென்றுக்கொண்டிருக்க, அவரை தொடர்ந்து சீன அதிபரும் அவருடைய அதிகாரிகளும் வந்துக்கொண்டிருந்தனர். இது தொடர்பான காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+