சீனாவில் பிரதமர் நரேந்திர மோடி! பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு!!
ஜியாங்: பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசு முறை பயணமாக சீனா சென்றடைந்தார். அந்நாட்டின் ஜியாங்க் விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பளிக்கப்பட்டது.
நாட்டின் பிரதமராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக சீனாவுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லியில் இருந்து நேற்று நள்ளிரவு புறப்பட்ட பிரதமர் மோடி இன்று அதிகாலை சீனாவின் ஜியாங்க் விமான நிலையம் சென்றடைந்தார்.
அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்புடனும் அந்நாட்டு பாரம்பரிய நடன நிகழ்ச்சியுடனும் வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் சிறுமி கொடுத்த பூங்கொத்தை மகிழ்ச்சியுடன் மோடி வாங்கினார். அவரை நடன கலைஞர்கள் ஆடிப்பாடி வரவேற்றனர்.
Chinese traditional dancers welcoming PM at Xi’an Xiangyang International Airport, through various performances pic.twitter.com/jq4zxv5Cnv
— PIB India (@PIB_India) May 14, 2015 6-ம் நூற்றாண்டில் புத்த மதத்தை பரப்பிய ஜியான்ஜாங் நினைவைப் போற்றும் வகையில் ஜியான் நகரில் உள்ள வைல்ட் கூஸ் பகோடா என்ற பாரம்பரிய வழிபாட்டு தலம் உள்ளிட்ட இடங்களை இந்திய பிரதமருக்கு சீன அதிபர் சுற்றிக் காட்டினார். பின்னர் அங்கிருந்து, தலைநகர் பெய்ஜிங் செல்லும் பிரதமர் மோடியை சீன பிரதமர் லி கெகியாங் வரவேற்று இரு நாடுகளும் பயன்பெறும் வகையில் பல ஒப்பந்தங்களை மேற்கொள்கிறார்.
சீனாவின் தொழில் நகரமான ஷாங்காய் செல்லும் மோடி அங்கு சீன தொழிலதிபர்களை சந்தித்து, இந்தியாவில் ஏராளமாக முதலீடு செய்யுமாறு, வேண்டுகோள் விடுக்க உள்ளார். அதன்பின் மங்கோலியா நாட்டிற்கு செல்லும் பிரதமர் மோடி தென் கொரியாவுக்கும் செல்கிறார்.












Click it and Unblock the Notifications