For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முதல் முறை.. பிரதமர் மோடி பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் நேரில் சந்திப்பு.. ஜி20 மாநாட்டு சுவாரசியம்

Google Oneindia Tamil News

ஜகார்த்தா: ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியும், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கும் சந்தித்து பேசினர். அப்போது ரிஷி சுனக்கிற்கு மோடி வாழ்த்து தெரிவித்த நிலையில் இருவரும் சிரித்த முகத்துடன் கைக்குலுக்கி கலந்துரையாடினர்.

உலக பொருளாதாரத்தில் நிலவும் சிக்கல்களை களையும் வகையில் வளர்ச்சியடைந்த, வளரும் நாடுகளின் ஒன்றாக இணைந்து ஜி20 கூட்டமைப்பாக உள்ளது.

இந்த கூட்டமைப்பில் மொத்தம் 20 நாடுகள் உள்ளன. இந்தியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, தென்ஆப்பிரிக்கா, துருக்கி, ஜப்பான், பிரான்ஸ், அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, ஜெர்மனி, இந்தோனேசியா உள்பட 20 நாடுகள் உள்ளன.

இது புத்தர், காந்தியின் பூமி.. இந்திய ஜி20 மாநாட்டில் உலக அமைதி உறுதியாகும்..பிரதமர் மோடி நம்பிக்கைஇது புத்தர், காந்தியின் பூமி.. இந்திய ஜி20 மாநாட்டில் உலக அமைதி உறுதியாகும்..பிரதமர் மோடி நம்பிக்கை

 உச்சி மாநாடு

உச்சி மாநாடு

இந்த அமைப்பின் உச்சி மாநாடு ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. இந்ந மாநாட்டில் ஜி20 உறுப்பு நாடுகளின் அதிபர், பிரதமர் அல்லது அமைச்சர்கள் பங்கேற்பார்கள். அதன்படி இந்தோனேசியாவின் பாலி நகரில் 2 நாட்கள் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாடு இன்று துவங்கி நாளை வரை நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோபைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உள்பட ஜி20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று வருகின்றன.

 தலைவர்கள் சந்திப்பு

தலைவர்கள் சந்திப்பு


இன்று காலை துவங்கிய மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். மேலும் மாநாட்டில் அருகருகே இருக்கைகள் இருந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடனும், பிரதமர் நரேந்திர மோடியும் மரியாதை நிமித்தமாக கைக்குலுக்கி பேசி கொண்டனர். அதேபோல் பிற நாட்டின் தலைவர்களும் ஒருவருக்கொருவர் சந்தித்து நலம் விசாரித்து வருவதோடு இருநாடுகளின் உறவுகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

ரிஷி சுனக்குடன் சந்திப்பு

ரிஷி சுனக்குடன் சந்திப்பு

அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் சந்தித்து பேசினர். பிரிட்டன் பிரதமரான பிறகு முதல் முறையாக ரிஷி சுனக்கை, பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் சந்தித்தார். பிரிட்டன் பிரதமரானதற்கு ரிஷி சுனக்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு இருவரும் சிரித்த முகத்துடன் கலந்துரையாடினர். முன்னதாக இருவரும் போனில் பேசியிருந்தனர். கடந்த மாதம் இருநாட்டின் வர்த்தகம் சார்ந்த உறவு தொடர்பாக போனில் உரையாடினர்.

 போட்டோ வெளியீடு

போட்டோ வெளியீடு

இதுபற்றி பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலம் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛பாலியில் நடக்கும் ஜி20 முதல் நாள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் சந்தித்து பேசி கொண்டனர்'' எனக்கூறி போட்டோவை வெளியிட்டுள்ளது. இதேபோல் பிரதமர் நரேந்திர மோடி, செனகல் பிரதமரும் ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைவருமான மெக்கே சால் என்பவரையும் சந்தித்து பேசினார். இதுபற்றி பிரதமர் அலுவலகம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‛‛ஆப்பிரிக்காவின் முக்கியமான வளர்ச்சி பங்காளியாக உள்ள மெக்கே ஷால் உடன் கலந்துரையாடப்பட்டது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Prime Minister Narendra Modi, who is participating in the G20 Summit, and Britain Prime Minister Rishi Sunak met and talked. While Modi congratulated Rishi Sunak, both of them exchanged a handshake with smiling faces.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X