புடினுக்கு ரத்த புற்றுநோயா?.. உக்ரைன் போருக்கு முன் நடந்தது என்ன? விவரிக்கும் நெருங்கிய தொழிலதிபர்
மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு ரத்த புற்றுநோய் ஏற்பட்டிருக்கலாம் என அதிபருக்கு நெருக்கமான தொழிலதிபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போரிட்டு வருகிறது. இந்த போர் அழிவால் உக்ரைனை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர ஒரு நூற்றாண்டு ஆகும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கவலை தெரிவித்திருந்தார்.
உக்ரைன் மீது போர் புரிய வேண்டாம் என அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், இந்தியா உள்ளிட்டவை கேட்டுக் கொண்டும் புடின் உக்ரைன் மீதான தனது ராணுவ நடவடிக்கைகளை திரும்ப பெறவில்லை.

பொது இடங்கள்
அண்மைக்காலமாக பொது இடங்களில் தோன்றும் புடினின் செயல்பாடுகள் சந்தேகத்தை எழுப்புகின்றன. உக்ரைன் மீதான போர் குறித்து ராணுவ அதிகாரியுடன் ஆலோசனை நடத்திய போது நாற்காலியின் இரு முனைகளையும் கெட்டியாக பிடித்துக் கொண்டிருந்தார் புடின்.

ரஷ்யா வெற்றி விழா
அது போல் ரஷ்யா வெற்றி விழா அணிவகுப்பு கொண்டாட்டத்தின் போது கால்களை கம்பளியால் மூடியிருந்தார். முகத்தில் தெளிவு இல்லை, கவலை தோய்ந்து காணப்பட்டார். அப்போது கம்பீரமில்லாமல் அமர்ந்திருந்தார், கைகளை கட்டிக் கொண்டிருந்தார். எனவே புடின் ஏதோ நோய் வாய்பட்டிருக்கலாம் என சொல்லப்பட்டது.
Recommended Video

தகவல்கள்
ஆனால் இந்த தகவல்களை வைத்து பார்க்கும் போது அவருக்கு கேன்சர் அல்லது பார்கின்சன் நோய் இருக்கலாம் என சொல்லப்பட்டது. ஆனால் புடின் குறித்து நாள்தோறும் ஒரு தகவல்கள் வருகின்றன. அதில் புடினுடன் பணியாற்றிய முன்னாள் உளவாளி ஒருவர் கூறுகையில் விளாடிமிர் புடினின் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என்கிறார்.

ரத்த புற்றுநோயா?
அதே வேளையில் புடினுக்கு நெருக்கமான தொழிலதிபர் ஒருவர் கூறுகையில் புடினுக்கு ரத்த புற்றுநோய் ஏற்பட்டிருக்கிறது என்கிறார். அவர் ஏற்கெனவே ரத்த புற்றுநோய்க்காக அதாவது உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளுக்கு உத்தரவிடுவதற்கு முன்பே ஒரு அறுவை சிகிச்சை செய்துள்ளார். புடினுக்கு என்ன நடக்கும் என தெரியவில்லை. ஆனால் உக்ரைன், ரஷ்யா பொருளாதாரங்களை அழித்துவிட்டார் என்கிறார் அந்த தொழிலதிபர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications