"அமெரிக்கா இன்னும் எங்க கிட்ட வர்த்தகம் செய்யுது.. இந்தியா மீதான வரி எல்லாம் நாடகம்.." புதின் தாக்கு
மாஸ்கோ: ரஷ்யக் கச்சா எண்ணெய் வாங்குவதாக இந்தியா மீது அமெரிக்கா அதிக வரி வித்துள்ளது. இதற்கிடையே இந்தியாவுக்கு ஆதரவாக வந்துள்ள ரஷ்ய அதிபர் புதின், அமெரிக்காவுக்கும் டிரம்ப் நிர்வாகத்திற்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தக் கூடுதல் வரி அமெரிக்காவுக்கே பாதகமாக அமையும் எனக் குறிப்பிட்ட அவர், அமெரிக்கா கூட ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து சில பொருட்களை வாங்கி வருவதாகக் குறிப்பிட்டார்.
ரஷ்ய எண்ணெய்யை வாங்குவதாகச் சொல்லி இந்தியா மீது டிரம்ப் 50% வரிகளை விதித்தார். இது இரு நாட்டு உறவை மிகக் கடுமையாகப் பாதித்துள்ளது. ஏற்கனவே டிரம்ப்பின் இந்த நடவடிக்கையை இந்தியா விமர்சித்துள்ளது. இதற்கிடையே இந்தியாவுக்கு ஆதரவாக ரஷ்ய அதிபர் புதின் குரல் கொடுத்துள்ளார்.

புதின்
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கும் நிலையில், அதைக் குறைத்துக் கொள்ளுமாறு டிரம்ப் நிர்வாகம் அழுத்தம் கொடுப்பது குறித்துக் கடுமையாக விமர்சித்துள்ளார். இது அமெரிக்காவுக்கே பாதகமாக அமையும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
தெற்கு ரஷ்யாவின் சோச்சி நகரில் நடைபெற்ற வால்டாய் விவாத மன்றத்தில் பேசிய புதின், ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது அதிக வரி விதித்தால் சர்வதேச அளவில் எரிசக்தி விலைகள் உயரும் என்றும் இதனால் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை அதிகமாக வைத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் தெரிவித்தார். இது அமெரிக்கப் பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
இந்தியாவுக்கு ஆதரவு
மேலும், புதின் இந்த டிசம்பர் மாதம் இந்தியா வரும் சூழலில், அது தொடர்பாக ஆர்வமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் அவர், கச்சா எண்ணெய் இறக்குமதி காரணமாக இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே உள்ள வர்த்தகச் சமநிலையின்மையைக் குறைக்க நடவடிக்கைகள் எடுக்குமாறும் தனது அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அவர் மேலும் பேசுகையில், "இந்தியாவுடன் நமக்கு ஒருபோதும் எந்தப் பிரச்சனையும் இருந்ததில்லை. ஒருபோதும் பிரச்சனை இருந்ததே இல்லை.. வெளியிலிருந்து வரும் அழுத்தங்களுக்கு இந்தியா அடிபணிய வேண்டிய அவசியம் இல்லை. இந்தியா மிகச் சிறந்த நாடு.. இந்தியாவை அவமதிக்க இந்தியர்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். பிரதமர் நரேந்திர மோடி அத்தகைய நடவடிக்கையை எடுக்க விட மாட்டார்.. ரஷ்ய எரிசக்தியை இந்தியா வாங்குவதை நிறுத்தினால், 9 பில்லியன் முதல் 10 பில்லியன் டாலர் வரை இழப்புகள் ஏற்படும்.
இந்திய மக்கள்
இந்தியா போன்ற நாட்டின் மக்கள், அரசியல் தலைமை எடுக்கும் முடிவுகளை உன்னிப்பாகக் கண்காணிப்பார்கள். எனவே, இதுபோன்ற அவமதிப்பு நடவடிக்கையை அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். பிரதமர் மோடியை எனக்குத் தெரியும்; அவர் ஒருபோதும் இத்தகைய நடவடிக்கைகளை எடுக்க மாட்டார். மேலும், அமெரிக்காவின் வரிகள் பயனற்றதாகவே முடியும்.
அமெரிக்கா நாடகம்
அமெரிக்காவின் தற்காலிக வரிகள் காரணமாக இந்தியாவுக்கு ஏற்படும் இழப்புகள் ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்யால் சமப்படுத்தப்படும். மேலும், இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகச் சமநிலையின்மையைப் போக்க, இந்தியாவிடமிருந்து அதிக விவசாயப் பொருட்கள் மற்றும் மருந்துகளை வாங்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம்.
ரஷ்யக் கச்சா எண்ணெய்யை வாங்க வேண்டாம் என இந்தியாவுக்கு அமெரிக்கா பிரஷர் போடுகிறது. ஆனால், அமெரிக்கா அணுமின் நிலையங்களுக்குத் தேவையான எரிபொருள் ரஷ்யாவில் இருந்தே செல்கிறது. அமெரிக்காவுக்குத் தேவையான யுரேனியம் எங்கள் நாட்டில் இருந்தே செல்கிறது" என்றார்.
-
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்!












Click it and Unblock the Notifications