முழு ஊதியமும் நன்கொடை..ஆப்கன் நிலநடுக்கத்துக்கு நடுவே ரஷீத் கான் சொன்ன வார்த்தை.. நெகிழ்ச்சி
காபூல்: ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 2000 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த பெரும் சோகத்துக்கு நடுவே தான் ஆப்கானிஸ்தான் அணியின் வீரரான ரஷீத் கான் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களின் மனதை ஈர்த்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. பல நிலநடுக்கங்கள் சக்தி குறைந்து இருப்பதால் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவது இல்லை.

ஆனால் சில நேரங்களில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டு உயிர் பலி வாங்கி வருகிறது. இந்நிலையில் தான் நேற்று ஆப்கானிஸ்தான் நாட்டில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டது.
அதாவது ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெராத் மாகாணத்திற்கு வடமேற்கு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் 4.3 மற்றும் 6.3-க்கு இடைப்பட்ட அளவுகளில் தொடர்ச்சியாக 9 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அலறியடித்து வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தன. சில இடங்களில் நிலநடுக்கத்தை தாங்க முடியாமல் கட்டடங்கள் இடிந்து விழுந்தன.
இதனால் வீடுகளில் வசித்து வந்த மக்கள் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கின. இதையடுத்து பொதுமக்கள் மற்றும் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு ஆயிரக்கணக்கானவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும் கூட நிலநடுக்கத்தில் சிக்கி 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். மேலும் ஏராளமானவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் தான் ஆப்கானிஸ்தானுக்கு தேவையான உதவிகளை உலக நாடுகள் செய்ய தொடங்கி உள்ளன. இதற்கிடையே தான் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரரான ரஷீத் கான் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களின் மனதை வென்றுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
‛‛ஆப்கானிஸ்தானின் மேற்கு மாகாணங்களில் (ஹெரத், ஃபரா மற்றும் பத்கிஸ்) ஏற்பட்ட நிலநடுக்கத்தின் ஏற்பட்டுள்ள துயர சம்பவத்தை அறிந்து மிகுந்த வருத்தப்பட்டேன். இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் உலகோப்பை 2023ம் போட்டி சம்பளத்தை நன்கொடையாக வழங்குகிறேன். விரைவில் நிதி திரட்டுவதற்கான பிரசாரத்தையும் தொடங்குவோம்'' என தெரிவித்துள்ளார். ரஷீத் கானினின் இந்த அறிவிப்புக்கு ரசிகர்கள் அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications