For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீங்க ட்ரம்ப் ஆதரவாளர்.. ஹோட்டலை விட்டு உடனே வெளியே போங்க.. உலகை திரும்பி பார்க்க வைத்த ஒரு குரல்

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    உலகை திரும்பி பார்க்க வைத்த ஒரு குரல்-வீடியோ

    வாஷிங்டன்: அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்திலுள்ள லெக்சிங்டன் என்ற சிறிய நகரம் ஒட்டுமொத்த உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    இதற்கு காரணம், லெக்சிங்டன் நகரிலுள்ள 'ரெட் ஹென்' என்ற குட்டி ஹோட்டலுக்கு சென்ற அமெரிக்க வெள்ளை மாளிகை பிரஸ் செக்ரட்டரி (Press Secretary) சாரா சாண்டர்ஸ் மற்றும் அவரது குடும்பத்தாரை ஹோட்டலை விட்டு வெளியேறுமாறு, அதன் உரிமையாளர் ஸ்டீபனி வில்கின்சன் கூறியதுதான்.

    "அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு ஆதரவானவர்தானே நீங்கள், அப்படியானால் எனது ஹோட்டலை விட்டு வெளியேறுங்கள்" என ஹோட்டல் பெயரிலுள்ள சிவப்பு கோழியை போலவே மாறி கொக்கரித்துள்ளார் ஸ்டீபனி வில்கின்சன்.

    சாரா விளக்கம்

    நடந்த சம்பவம் குறித்து, சாரா தனது ட்விட்டர் பதிவில் பின்னர் இவ்வாறு கூறுகிறார். "ரெட் ஹென் ஹோட்டல் உரிமையாளர் என்னை வெளியேறுமாறு கூறியதும், அமைதியாக நான் வெளியே வந்துவிட்டேன். நான் மக்களை எப்போதுமே சிறப்பாக கையாளவே விரும்புவேன். எனக்கு உடன்படாதவர்களை கூட மரியாதையோடு நடத்துவேன். அதை தொடருவேன்" என்று கூறியுள்ளார். அமெரிக்க அதிபருக்காக பணியாற்றுவதால்தான் தன்னை ஹோட்டல் உரிமையாளர் வெளியேற கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    வைரல் ட்வீட்

    வைரல் ட்வீட்

    சாரா வெளியிட்ட இந்த ட்வீட் இதுவரை 50 ஆயிரத்திற்கும் அதிகமாக ஷேர் செய்யப்பட்டுள்ளது. 1லட்சத்து 76 ஆயிரம் லைக்குகளை பெற்றுள்ளது. 1 லட்சத்து 63 ஆயிரம் பேர் கமெண்ட் செய்துள்ளனர். அமெரிக்க ஊடகங்கள் அத்தனையின் பார்வையும் இப்போது ரெட் ஹென் ஹோட்டல் மீதுதான் உள்ளது. லைவ் டெலிகாஸ்ட் செய்ய ஹோட்டல் அருகே குவிந்துவிட்டனர் அவர்கள்.

    ஹோட்டலுக்கு எதிராக போராட்டம்

    ஹோட்டலுக்கு எதிராக போராட்டம்

    இதனிடையே ட்ரம்ப் ஆதரவாளர்கள், ரெட் ஹென் ஹோட்டல் அருகே, செவ்வாய்க்கிழமை மாலை போராட்டங்களை நடத்தியுள்ளனர். நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டும் என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை அவர்கள் தூக்கியிருந்தனர்.

    அதிபரே இப்படியா

    அதேநேரம் அதிபர் ஸ்தானத்தில் உள்ள, ட்ரம்ப் இவ்வாறு தனியார் நிறுவனம் ஒன்றை விமர்சனம் செய்வது அமெரிக்க சட்டத்திற்கு மாறானது என்று நெட்டிசன்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். விதிமுறைகளை குறிப்பிட்டு இவ்வாறு ட்ரம்ப் பற்றி அவர்கள் விமர்சனம் செய்கிறார்கள். இந்த விதிமுறைகள் எல்லாம் ட்ரம்ப்புக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என கேலி செய்கிறார்கள் அவர்கள்.

    English summary
    White House press secretary Sarah Huckabee Sanders was asked to leave a small restaurant in Virginia over the weekend because of the owner’s opposition to the Trump administration’s policies.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X