அடிப்படை கல்வி.. அதுலையே கை வச்சதான் சரிபட்டு வரும்னு அரபு அரசு முடிவு பண்ணீருச்சு!
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் சிஓபி28 (COP28) மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக ரெவிர்இடி உச்சி மாநாட்டின் (RewirEd Summit) இரண்டாவது தவணை சமீபத்தில் நடைபெற்றது. துபாயில் உள்ள எக்ஸ்போ சிட்டியின் கனெக்ட் கான்ஃபெரன்ஸ் சென்டரிலேயே இது நடைபெற்றது. இந்த கூட்டத்தில், காலநிலை நடவடிக்கைக்கு தீவிரமாக பங்களிக்கும் வகையில் கல்வி முறைகளை மாற்றியமைப்பதில் கவனம் செலுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு கல்வியின் ஒவ்வொரு கட்டத்திலும் இதுகுறித்து கற்பிக்க வேண்டும் என்பதன் மையக் கருத்தாகும். இதன் வாயிலாக மாணவர்களுக்கு அடிப்படையிலேயே காலநிலை குறித்த விழிப்புணர்வு மற்றும் அதில் அவர்களின் பங்களிப்பை வழங்குவதற்கு உந்துதல் உள்ளிட்டவற்றை வழங்குவதே முக்கிய நோக்கமாகும்.

இந்த மாநாட்டில் 76 நாடுகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. குறிப்பிட்ட சில மாநிலங்களின் தலைவர்களும் இதில் பங்கேற்றனர். அவர்கள், அவர்களின் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ள இந்த தளம் பெரும் உதவியாக இருந்தது. இவர்கள் மட்டுமின்றி கார்பரேட் நிறுவனங்களைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் இதில் கலந்துக் கொண்டனர்.
அந்தவகையில் 209க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இதில் கலந்துக் கொண்டன. வரும் காலத்திற்கு ஏற்ப கல்வி முறைகளை மறு சீரமைப்பதற்கான புதிய திட்டங்கள் மற்றும் சாத்தியக் கூறுகள் பற்றிய தங்களின் கருத்துக்களை பங்கேற்பாளர்கள் இதில் பகிர்ந்துக் கொண்டனர். அதே நேரத்தில் இளைய தலைமுறையினரை காலநிலையில் ஈடுபடுத்தும் முயற்சிகளும் இந்த மாநாட்டின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டது. மேலும், இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முயற்சிகள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அவை பின்வருமாறு..
கல்வி மற்றும் காலநிலை நடவடிக்கைக்கான ஐக்கியம்:
பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதில் கல்வி முக்கியப் பங்களிப்பை வழங்கும் என்பதே, ரெவிர்இடி உச்சிமாநாட்டின் சொற்பொழிவின் மையமாக கருத்தாக இருக்கின்றது. மேலும், சுற்றுச்சூழல் பாதிப்புக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளில் உள்ள சவால்களையும் இந்த மாநாடு அடிக்கோடிட்டுக் காட்டி இருக்கின்றது. இத்துடன், இதனை திறம்பட எதிர்கொள்ள இருக்கும் வழிகளும் மாநாடு வாயிலாக எடுத்துரைக்கப்பட்டு இருக்கின்றது. உச்சிமாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் மாணவர்கள், கல்வியாளர்கள், இளைஞர், ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் பொறுப்பாளர்கள் மற்றும் பழங்குடியின பிரதிநிதிகள் என பலதரப்பட்ட பங்கேற்பாளர்களர்கள் தங்களின் கருத்துகளையும் இதில் பகிர்ந்துக் கொண்டனர்.
புதுமையான முயற்சிகளின் வாயிலாக இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துதல்:
சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் கல்வி சீர்திருத்தத்தை நோக்கிய ஒரு தீர்க்கமான முன்னெடுப்பை சமிக்ஞை செய்யும் வகையிலேயே உச்சிமாநாடு அமைந்தது. இதற்காகன முயற்சிகள் பலவற்றை இங்கேயே நிறுவனங்கள் சில தொடங்கப்பட்டன. யுனிசெஃப் மற்றும் ஜெனரேஷன் அன்லிமிடெட் "கிரீன் ரைசிங்" என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் வாயிலாக, வளரும் நாடுகளில் 10 மில்லியன் இளைஞர்களைத் தேர்வு செய்து, அவர்களை அடிமட்ட காலநிலை முன்முயற்சிகளை மேற்கொள்ள செய்ய வைப்பதே இதன் இலக்காகும்.
இதேபோல், ஆகா கான் அறக்கட்டளை, ஓர் ஆன்லைன் தளத்தை உருவாக்கி இருக்கின்றது. இதை ஆசிரியர்கள் மட்டுமே இயக்க இருக்கின்றனர். மேலும், இந்த தளம் காலநிலை நடவடிக்கை உத்திகளின் களஞ்சியமாக இருக்கும். இத்துடன் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக உச்சி மாநாட்டில், கிர்கிஸ் குடியரசு மற்றும் மலாவியின் அரசாங்கங்கள், பருவநிலை மீள்தன்மை நடவடிக்கைகள் மற்றும் செயல்களுடன், குழந்தைகளின் குழந்தை பருவத்திலேயே சுற்றுச்சூழல் குறித்த பாட படிப்பினை புகுத்த வேண்டும் என்பது விருப்பம் என அறிவித்தன.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications