என்னதான் ஆச்சு விளாடிமிர் புடினுக்கு? கடுமையான உடல்நல பாதிப்பா? பீதி கிளப்பும் ஊகங்கள்! உண்மை என்ன?
மாஸ்கோ : உக்ரைன் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினின் உடல்நிலை குறித்து வதந்திகள் பரவி வருகின்றன. அவரது உடல் மொழி மற்றும் அவர் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய விதம் குறித்து பல சுகாதார நிபுணர்கள் ஆய்வு செய்ததில் பல யூகங்கள் வெளியாகி வருகின்றன.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 60 நாட்களை கடந்துள்ள நிலையில் நாளுக்கு நாள் அங்கு நிலைமை மிக மோசமாகி வருவதாகவும், அந்நாட்டில் இரண்டாம் கட்ட தாக்குதலில் கிழக்கு பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு ஒருபுறம் இருந்தாலும், அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புடினின் தனிப்பட்ட வாழ்க்கை பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. பல செய்தி நிறுவனங்கள் நீண்ட காலமாக ரஷ்ய அவரின் உடல்நிலை குறித்த தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.

விளாடிமிர் புடின்
சமீபத்திய வாரங்களில் புடினின் உடல் மொழி மற்றும் அவர் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய விதம் குறித்து பல சுகாதார நிபுணர்கள் ஆய்வு செய்ததில் பல ஊகங்கள் வெளியாகி உள்ளன. பல இடங்களில் அவரது கைகள் நடுங்குவதைக் காணலாம் மற்றும் அவரது முகம் உள்ள புது வகையான மேக்கப் அவருக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளதை காட்டுவதாகக் கூறுகின்றனர். சிட்னியில் வசிக்கும் ஒரு அழகுசாதன மருத்துவர், புதின் இளமையாக இருந்தபோது எடுக்கப்பட்ட படத்தைப் பதிவிட்டு, புடின் தனது வயது மற்றும் உடல் உபாதைகளை மறைக்க மேக்கப் போட்டு இருப்பதாகக் கூறியுள்ளார்.

உடல் நலக் கோளாறு
விளாடிமிர் புடின்இன் மேக்கப் குறித்து பல ஆண்டுகளாக பல வதந்திகள் உள்ளன. news.com.au வெளியிட்டுள்ள கருத்தின் படி, அவர் தனது "கடினமான மனிதர்" என்ற இமேஜை அதிகரிக்கவும், அதிகரிக்கும் வயதைத் குறைத்து காட்டுவதற்காகவும் அவர் இதைச் செய்துள்ளார் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். இந்நிலையில், நாட்டின் ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களுக்கான விருது வழங்கும் விழாவில் ரஷ்ய அதிபர் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தபோது அவர் குண்டாக காணப்பட்டதாக நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

பார்கின்சன் நோய்
நியூஸ் வீக், பெலாரஷ்ய ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோவை புடின் சந்தித்த இரண்டு வெவ்வேறு பதிவுகளை சுட்டிக்காட்டியுள்ளது. தனது சந்திப்பின் போது ஆதரவுக்காக மேசையை புடின் பிடிப்பதைக் காணலாம் எனவும், மற்றொரு பதிவில் அவர் தனது கையை மார்புக்கு அருகில் வைத்திருப்பதற்கு முன்பு நடுங்குவது போல் தெரிகிறது. ட்விட்டரில் உள்ள பல பயனர்கள் புட்டின் உடல் இயக்கத்தை பாதிக்கக்கூடிய நரம்பு மண்டலக் கோளாறான பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக யூகித்துள்ளனர்.
Recommended Video

அமெரிக்கா கருத்து
எவ்வாறாயினும், ரஷ்ய ஜனாதிபதியின் உடல்நிலை குறித்து ஊகிக்க வெள்ளை மாளிகை மறுத்துவிட்டது, பத்திரிகை துறை செயலாளர் ஜென் சாகி, புடினின் உடல்நிலை குறித்து எந்தவொரு குறிப்பிட்ட கருத்தும் தன்னிடம் இல்லை என்று கூறினார். 1952ஆம் ஆண்டு செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் பிறந்தவர் விளாடிமிர் புடின். 1975 ஆம் ஆண்டு ரஷ்யாவின் அதிகாரமிக்க உளவு அமைப்பாக கருதப்படும் கேஜிபியில் இணைந்தார். 1990ஆம் ஆண்டு சோவியத் யூனியன் உடைந்த பிறகு ரஷ்யாவின் அரசு பணியில் இணைந்து கொண்டார். தொடர்ந்து அசாத்திய நகர்வுகள் மூலம் 2000ஆண்டு ரஷ்யாவின் அதிபரான அவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக ரஷ்யாவை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications