நிலவில் அமைய உள்ள அணு உலை.. சீனா+ரஷ்யா போட்டுள்ள மாஸ்டர் பிளான்! பின்னால் இருக்கும் திட்டம் இதுதான்
மாஸ்கோ: நிலவின் மேற்பரப்பில் அணு உலையை அமைக்க ரஷ்யாவும், சீனாவும் ஏற்கெனவே திட்டமிட்டிருந்தது. இந்நிலையில், இந்த திட்டத்திற்கு செயல் வடிவம் கொடுக்கும் பணியை தற்போது இரு நாடுகளும் தொடங்கியுள்ளன.
பூமிக்கு இயற்கையாகவே அமைந்த துணை கோள்தான் நிலவு. ஆதி காலத்தில் நாட்களை அறிந்துக்கொள்ள மனிதன் நிலவை காலண்டராக பயன்படுத்தி வந்தான். மட்டுமல்லாது, பூமியில் இருக்கும் கடல் அலையை சீராக வைத்திருப்பதிலும், பூமியின் சுழற்சியை கட்டுப்படுத்துவதிலும் நிலவு முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே நிலவு குறித்த ஆய்வுகள் தொடக்கத்தில் தீவிரமடைந்திருந்தது. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் இந்த ஆய்வுகளுக்கு உலக நாடுகள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

இப்படி இருக்கையில்தான், நிலவில் அணு உலையை அமைக்க ரஷ்யாவும், சீனாவும் முயன்று வருகின்றன. இது இரு நாடுகளின் கனவு திட்டம். இரண்டு நாடுகளும் விண்வெளித்துறையில் மகத்தான சாதனைகளை ஏற்கெனவே படைத்துள்ள நிலையில், அடுத்த சாதனைக்காக இந்த திட்டத்தை கையில் எடுத்திருக்கின்றன. இது குறித்து பேசிய ரஷ்யாவின் விண்வெளி ஏஜென்சியான ரோஸ்கோஸ்மோஸின் தலைவர் யூரி போரிசோவ், இரு நாடுகளும் வரும் 2035ம் ஆண்டுக்குள் அணு உலையை நிலவில் நிறுவ திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
மேலும், "நிலவில் 'சர்வதேச சந்திர ஆராய்ச்சி நிலையத்தை' உருவாக்குவதே எங்கள் இலக்கு. எனவே இதற்கு முன்னோட்டமாகத்தான் இந்த அணு உலையை அமைக்க திட்டமிட்டுள்ளோம். கடந்த 2021ம் ஆண்டே இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுவிட்டோம். தற்போது இதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட இருக்கின்றன.
அணு உலை கட்டுமானத்தை முழுக்க முழுக்க ரோபோக்களே மேற்கொள்ளும். வரும் 2028 ஆம் ஆண்டுக்குள் நிலவு மண்ணைப் பயன்படுத்தி ஒரு அடிப்படை நிலையத்தை நிறுவி, அதன் பின்னர் விரிவான கட்டுமானத்தை தொடங்க திட்டமிடப்பட்டிருக்கிறது. இப்படியாக கட்டப்படும் இந்த தளம், 2050ம் ஆண்டளவில் சந்திர ஆராய்ச்சிக்காகவும், மனிதர்களை ஏற்றிச் செல்வதற்கான ஏவுதளமாகவும் முழுமையாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அணு உலை கட்டுமானங்களை உருவாக்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்தாகிவிட்டது. பூமியை போல நிலவில் சோலார் தகடுகளை அமைத்து மின்சாரத்தை எடுக்க முடியும். ஆனால் அவை நமக்கு போதுமானதாக இருக்காது எனவேதான் அணு உலையை கட்ட தீர்மானித்திருக்கிறோம். இந்த அணு உலையை எப்படி குளிர்விப்பது என்பதை தவிர மற்ற அனைத்து கேள்விகளுக்கும் நம்மிடம் விடை இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
இதுவரை அமெரிக்கா மட்டுமே நிலவில் மனிதர்களை இறங்கி சாதனை படைத்திருக்கிறது. மட்டுமல்லாது நிலவை வைத்து 'ஆர்ட்டெமிஸ்' எனும் பெரிய திட்டத்தை அமெரிக்கா விரைவில் செயல்படுத்தப்பட இருக்கிறது. எனவே இதற்கு போட்டியாக அணு உலை திட்டத்தை ரஷ்யாவும், சீனாவும் கையில் எடுத்திருக்கின்றன.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
27 ஆண்டுகளுக்கு பிறகு.. இன்று ப்ளூ மைக்ரோ மூன்! மிஸ் பண்ணாதீங்க மக்களே! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications