
"வயாகரா" சப்ளே.. உக்ரைன் பெண்கள் கொடூர பலாத்காரம்! வெற்றிக்காக எந்த எல்லைக்கும் செல்லும் ரஷ்யா! பரபர
மாஸ்கோ: உக்ரைன் போரில் வெல்ல ரஷ்யா பயன்படுத்தும் மோசமான முறைகள் குறித்து இப்போது பரபர தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த பிப். மாதம் தொடங்கிய உக்ரைன் போர் ஏழு மாதங்களைத் தாண்டி தொடர்ந்து வருகிறது. இந்த போர் தொடங்கிய சமயத்தில் யாரும் இது இவ்வளவு காலம் நீட்டிக்கும் என்று நினைத்து இருக்க மாட்டார்கள்.
இருப்பினும், உக்ரைன் வீரர்கள் துணிச்சலாகப் போராடவே ரஷ்ய ராணுவம் திணறத் தொடங்கியது. மேலும், உக்ரைனுக்கு ஆதரவாக உலக நாடுகளும் ஆயுதங்களை வழங்கினர்.
ஓபிஎஸ் கூடவே இருந்து, அவருக்கே தெரியாம ரகசிய மீட்டிங்..

உக்ரைன் போர்
உண்மையில் புதின் தனது ராணுவத்தைப் பற்றி ஓவராக எண்ணிவிட்டார் என்றே சொல்ல வேண்டும். இதன் காரணமாகவே அவர் தைரியமாகப் போரை ஆரம்பித்தார். ஆனால், தொடக்கம் முதலே உக்ரைன் ராணுவத்தை வெல்ல முடியாமல் ரஷ்யா திணறத் தொடங்கியது. இந்தச் சூழலில் ரஷ்யா போரில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்பதற்காகக் கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டு உள்ளதாக ஐநாவின் சிறப்புப் பிரதிநிதி பரபர குற்றச்சாட்டைச் சுமத்தி உள்ளார்.

ஐநா சிறப்பு பிரதிநிதி
இது தொடர்பாக ஐநா சிறப்புப் பிரதிநிதி பிரமிளா பட்டன் கூறுகையில், "உக்ரைன் போரில் ரஷ்யா மோசமான நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளது. அங்கு மிகவும் மோசமான மனிதாபிமானமற்ற பாலியல் குற்றங்கள் நடந்து உள்ளன. அதற்கான அறிகுறிகள் இருக்கவே செய்கின்றனர். ரஷ்யா வீரர்கள் உக்ரைன் நாட்டுப் பெண்களைக் குறிவைத்து பலாத்காரம் செய்கிறார்கள்.

வயாகரா
அவர்கள் இதையே போர் உத்தியாகப் பயன்படுத்துகிறார்கள். இதற்காக அவர்கள் தங்கள் வீரர்களுக்கு வயாகரா போன்ற மாத்திரைகளைக் கூட சப்ளே செய்கிறார்கள். உக்ரைன் நாட்டில் இதன் காரணமாகப் பாதிக்கப்பட்ட பலரும் தங்களுக்கு நேர்ந்த கொடூரத்தைப் பகிர்ந்து கொண்டு உள்ளனர்" என்றார். வயாகரா மாத்திரை மூலம் ஆண்களுக்கு பாலியல் உணர்வுகளை அதிகம் துண்ட முடியும். ரஷ்ய ராணுவமே இதைத் தனது வீரர்களுக்கு இதை சப்ளே செய்கிறது.

கொடூர பலாத்காரம்
தொடர்ந்து ஐநா சிறப்புப் பிரதிநிதி பிரமிளா பட்டன் பேசுகையில், "அங்கு பெண்கள் கடத்தி செல்லப்படுகிறார்கள். பல நாட்கள் கொடூரமாக பலாத்காரம் செய்யப்படுகிறார்கள். ஆண்கள் மட்டுமில்லை, சிறுவர்களையும் ஆண்களையும் கூட அவர்கள் பலாத்காரம் செய்கிறார்கள். ஆண்களுக்கும் பிறப்புறுப்பு சிதைவு போன்ற நோய்கள் அங்கு ஏற்படுகிறது. இது ஒரு ராணுவ பிளான் தான் என்பதில் சந்தேகம் இல்லை.

ரஷ்யா பிளான்
பலாத்காரம் செய்யப்பட்ட உக்ரைன் பெண்கள் பலரும் ரஷ்யா ராணுவ வீரர்களிடம் வயக்ரா இருப்பதைப் பார்த்து உள்ளனர். பாலியல் பலாத்காரத்தின் போது உக்ரைன் பெண்களிடம் ரஷ்ய வீரர்கள் கூறியதை வைத்துப் பார்க்கும்போது இது ரஷ்யாவின் மனிதநேயமற்ற கீழ்த்தரமான திட்டம் என்பது உறுதியாகிறது. இது தொடர்பாக ஐநாவும் கூட அறிக்கை அளித்து உள்ளது போர் தொடங்கியது முதல் 100க்கும் மேற்பட்ட சம்பவங்களை ஐநா பதிவு செய்து உள்ளது.

4 வயது குழந்தை கூட
இதைப் போரின் ஒரு பகுதியாகவே ரஷ்யா திட்டமிட்டுப் பயன்படுத்துகிறது. 100க்கும் மேற்பட்ட பலாத்கார சம்பவங்களை ரஷ்யாவே உறுதி செய்து உள்ளது. இந்த அறிக்கைகளை வைத்துப் பார்க்கும் போது ரஷ்யப் படைகள் கீழ்த்தரமான குற்றங்களைச் செய்து உள்ளது உறுதியாகி உள்ளது. நான்கு வயது சிறுமி தொடங்கி 82 வயது முதியவரை வரை யாரையும் விடாமல் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்" என்று அதில் கூறப்பட்டு உள்ளது.