நண்பேன்டா.. 5ம் தலைமுறை விமான தொழில்நுட்பங்களை.. அள்ளிக் கொடுக்கும் ரஷ்யா! இந்தியாவுக்கு ஆஃபர்
மாஸ்கோ: இந்தியாவிடம் 5ம் தலைமுறை போர் விமானங்கள் கிடையாது. அதை தயாரிப்பதும் செலவு அதிகம் பிடித்த வேலை. இப்படி இருக்கையில் ரஷ்யா தனது 5ம் தலைமுறை போர் விமானமான SU-57E-ன் தொழில்நுட்பத்தை இந்தியாவிடம் பகிர்ந்துக்கொள்ள ரெடி என்று அறிவித்திருக்கிறது.
சர்வதேச அளவில் 3 நாடுகளிடம் மட்டுமே 5ம் தலைமுறை போர் விமானங்கள் இருக்கின்றன. ஒன்று அமெரிக்கா, இன்னொன்று ரஷ்யா, மூன்றாவது சீனா. ஆரம்பத்தில் ரஷ்யாவுடன் இணைந்து 5ம் தலைமுறை விமானங்களை தயாரிக்க இந்தியா திட்டமிட்டிருந்தது. ஆனால் அது வேலைக்கு ஆகவில்லை. செலவு அதிகம் இழுத்ததால், இந்த திட்டத்திலிருந்து இந்தியா கழன்றுக்கொண்டது.

சீனாவிடம் 5ம் தலைமுறை விமானம்
பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் நமக்கு பஞ்சாயத்து இருக்கிறது. இதில் சீனாவிடம் 5ம் தலைமுறை விமானங்கள் இருக்கின்றன. இந்த விமானங்களை வைத்திருக்கும் நாடுகள்தான் முதலில் தாக்குதலை தொடங்க முடியும். எதிரிகளின் ரேடார் தேடலுக்கு புலப்படாமல் இந்த விமானங்களால் பறக்க முடியும். நம்மிடம் இருக்கும் ரஃபேல் விமானங்களை விட, 5ம் தலைமுறை விமானங்கள் சிறப்பாக மறைந்திருந்து தாக்குதலை நடத்த முடியும்.
5ம் தலைமுறை விமானங்களின் பலம்
அதேபோல குறைந்த எரிபொருளை கொண்டு அதிக தூரத்திற்கும், மிக வேகமாகவும் பயணிக்க முடியும். போர் சூழலில் வேகம் மிக முக்கியம். ரஃபேல் விமானங்கள் அதிகபட்சமாக மணிக்கு 1,912 கி.மீ வரை பயணிக்கும். இது ஒலியின் வேகத்தில் 1.5 மடங்கு ஆகும். ஆனால் ரஷ்யாவின் SU-57 விமானம் மணிக்கு 2,136 கி.மீ தூரம் வரை பயணிக்கும். இத ஒலியின் வேகத்தில் 2 மடங்காகும். எனவே இந்தியாவுக்கு இந்த விமானங்கள் நிச்சம் தேவைப்படுகின்றன.
அமெரிக்க விமானங்கள்
அமெரிக்காவிடம் விமானத்தை வாங்கினால், அது வெறும் விமானத்தை மட்டுமே கொடுக்கும். மற்றபடி தொழில்நுட்ப விவரங்களை கொடுக்காது. ஆனால் ரஷ்யா முழு தொழில்நுட்ப விவரங்களை கொடுப்பதுடன், லைசென்ஸ் பெற்று இந்தியாவில் SU-57E விமானங்களை தாயாரித்துக்கொள்ளவும் அனுமதி வழங்க ரெடியாக இருப்பதாக தெரிவித்திருக்கிறது. இப்படி எந்த நாடும் அள்ளி கொடுக்காது. அந்த வகையில் இந்த ஆஃபரை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
சமீபத்தில் துபாயில் நடந்த விமான கண்காட்சியில் SU-57E விமானம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த விமானம் வானில் பறந்த தனது சக்தியை மொத்த உலகத்திற்கும் நிரூபித்திருக்கிறது. இதற்கு மேல் என்ன வேண்டும்?
வரி அச்சுறுத்தல்
இருப்பினும் இதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. சிக்கல்கள் என்றாலே அது அமெரிக்காதான். அதாவது ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகளுக்கு 400% வரை வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருக்கிறார். இந்த வரி அச்சுறுத்தல் காரணமாகத்தான் ரஷ்யாவிடமிருந்து வாங்கப்படும் கச்சா எண்ணெய்யை இந்தியா குறைத்திருக்கிறது. இப்படி இருக்கையில் மீண்டும் விமானம் தொடர்பாக வர்த்தம் போட்டால் இந்தியா மீதான வரி அதிகரிக்கப்படுமோ என்கிற அச்சம் எழுந்திருக்கிறது.
இப்படி அச்சம் ஒருபுறம் இருந்தாலும், ரஷ்ய விமானங்களை வாங்குவதற்கான தேவைகள் நமக்கு அதிகம் இருக்கின்றன. இந்திய விமானப்படையின் தளபதி ஏபி சிங், விமானப்படைக்கு அடுத்த 10-20 ஆண்டுகளில் 40 புதிய போர் விமானங்கள் தேவைப்படுகிறது என்று கூறியிருக்கிறார். ஆகவே ரஷ்ய விமானங்களை வாங்குவதற்கு இதுவே சரியன தருணம்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications