அரசியல் செய்யும் புதின்.. உக்ரைன் போரை வைத்து பெரிதாக திட்டம் போடும் ரஷ்ய அதிபர்? பெரிய சிக்கல்
மாஸ்கோ: ரஷ்யா உக்ரைன் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் இப்போது அமெரிக்கா தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்கிடையே போரை முடிவுக்குக் கொண்டு வரப் பூர்த்தி செய்ய வேண்டிய கண்டிஷன்களை ரஷ்யா இப்போது முன்வைத்துள்ளது. ரஷ்யாவின் இந்த கோரிக்கைகளுக்கு அமெரிக்கா என்ன சொல்லப் போகிறது என்பதே இப்போது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து வருகிறது. பைடன் அதிபராக இருந்தபோதே போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடந்தது. இருப்பினும், அதில் எந்தவொரு உடன்பாடும் ஏற்படவில்லை. இதையடுத்து உக்ரைன் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்த அமெரிக்கா, தொடர்ச்சியாக ஆயுதங்களை சப்ளை செய்து வந்தது.

டிரம்ப்
அதேநேரம் அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு நிலைமை மொத்தமாக மாறியது. இந்த போரை எவ்வளவு சீக்கிரம் முடிவுக்கு கொண்டு வர முடியுமோ எவ்வளவு சீக்கிரம் முடிக்க வேண்டும் என்பதில் டிரம்ப் தீவிரமாக இருக்கிறார். இதன் காரணமாகவே அவர் அமெரிக்க அதிகாரிகளை நேரடியாக ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டார். அதன்படி கடந்த சில வாரங்களாகவே பேச்சுவார்த்தை நடந்தது.
இதற்கிடையே உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வரவும் அமெரிக்கா உடனான உறவுகளை மீட்டெடுக்கவும் பூர்த்தி செய்ய வேண்டிய கண்டிஷன்கள் குறித்த லிஸ்ட்டை ரஷ்யா தரப்பு அமெரிக்காவிடம் கொடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த லிஸ்டில் என்ன கண்டிஷன்களை எல்லாம் பட்டியலிட்டுள்ளனர் என்பது குறித்த தகவல் இல்லை.
ரஷ்யா வைத்த கண்டிஷன்
மேலும், உக்ரைன் நாட்டுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட ரஷ்யா தயாராக இருக்கிறதா என்பது குறித்தும் தெளிவான தகவல் இல்லை. இருப்பினும், கடந்த 3 வாரங்களாக அமெரிக்கா மற்றும் ரஷ்ய அதிகாரிகள் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகே இந்த கண்டிஷன்கள் லிஸ்ட்டை ரஷ்யா கொடுத்துள்ளதாக அந்த அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யா இதற்கு முன்பே உக்ரைன் அமெரிக்கா மற்றும் நேட்டோவிடம் இதுபோல ஒரு லிஸ்ட்டை கொடுத்திருந்தது. இருப்பினும், சில காரணங்களால் அப்போது அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதற்கிடையே கிட்டதட்ட அதே கண்டிஷன்களை தான் ரஷ்யா இப்போது மீண்டும் வழங்கியிருக்கும் என்று கூறப்படுகிறது.
கண்டிஷன்கள் என்ன?
குறிப்பாக உக்ரைன் நாட்டை நேட்டோ அமைப்பில் சேர்க்கக்கூடாது, உக்ரைனில் வெளிநாட்டு வீரர்களைக் களமிறக்கக்கூடாது.. உக்ரைனின் கிரிமியா உட்பட ஐந்து மாகாணங்களை சில ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யா தன்னுடன் இணைத்த நிலையில், அதற்குச் சர்வதேச அங்கீகாரம் தேவை உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருக்கும் எனச் சொல்லப்படுகிறது. மேலும், நேட்டோ அமைப்பு ஐரோப்பிய நாடுகளின் தனது செயல்பாடுகளை அதிகரித்து வருவதே போருக்கான மூலகாரணம் என்று குறிப்பிட்டுள்ள ரஷ்யா, அது தொடர்பாகவும் சில கண்டிஷன்களை ரஷ்யா போட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ரஷ்யா உக்ரைன் இடையே 30 நாள் தற்காலிக போர்நிறுத்த திட்டத்தை முதற்கட்டமாக அமெரிக்கா முன்மொழிந்திருந்தது. அதற்கு ஏற்கனவே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஒப்புக்கொண்டுவிட்டார். அதேநேரம் ரஷ்ய அதிபர் புதின் இதுவரை தற்காலிக போர் நிறுத்தத்திற்கு எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை.
அரசியல் செய்யும் புதின்
அதேநேரம் இந்த போரை வைத்து ரஷ்யா அரசியல் செய்யப் பார்ப்பதாக வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். அதாவது இத்தனை காலம் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ஒரே பாதையில் பயணித்து வந்தது. உக்ரைன் போரை வைத்து இரு தரப்பையும் பிரித்து புவிசார் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த புதின் முயல்வதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
-
பரிதாபமாக சீரழியும் பாகிஸ்தான்.. இப்படியொரு நிலைமை ஏற்பட்டதே இல்லை.. ரொம்பவே மோசம்! -
மூழ்கடிக்கப்படும் ரூ.63,000 கோடி.. கடலுக்கு அடியில் அமையும் 73,000 டன் பிரம்மாண்டம்! என்ன மேட்டர் -
அடுத்த 60 நாட்கள் ரொம்ப முக்கியம்.. அமெரிக்கா ஈரான் போரில் மாற்றம்! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
100 நாட்களை தாண்டிய அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல்.. ஈரானை இன்னும் வீழ்த்த முடியாத ரகசியம் என்ன? -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை!












Click it and Unblock the Notifications