ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்திலிருந்து ரஷ்யா அட்டாக்.. உக்ரைன் எச்சரிக்கை
கீவ்: உக்ரைனில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலைய வளாகத்தில் ரஷ்யப் படையினர் ஆயுதங்களை குவித்து வைத்துள்ளதோடு, அங்கிருந்து அதிரடி தாக்குதல் நடத்தி வருவதால், பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக உக்ரைன் அணுசக்தி நிறுவனம் எச்சரித்துள்ளது.
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் இணைய முயற்சிக்கும் உக்ரைன் மீது ரஷ்ய படையினர், 143-வது நாளாக தொடர்ந்து தாக்குல் நடத்தி வருகின்றனர். இந்த போரில், ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் வீரர்களும் எதிர்தாக்குதல் நடத்தி வருகின்றனர். எனினும், இந்த போரில், பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

ரஷ்யாவின் நடவடிக்கையைக் கண்டிக்கும் வகையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடுமையான பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டும், அதுகுறித்து சிறிதும் கவலைக்கொள்ளாமல் ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவுக்கு மறைமாக பதிலடி கொடுக்கும் வகையில், உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், தொடர்ந்து ஆயுதம் மற்றும் நிதி உதவிகளை அளித்து தங்களது ஆதரவு தெரிவித்து வருகின்றன.
தொடர்ந்து ஆக்ரோஷமாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படையினர், தென் கிழக்கு உக்ரைனில் டினிப்ரோ ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான ஜபோரிஜியா அணுமின் நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். அங்கு உக்ரைன் ஊழியர்கள் இன்னும் பணியாற்றி வந்தாலும், அணு மின் நிலைய வளாகம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள் முழுவதும் ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டிதான் உள்ளது.
இந்நிலையில், அணு மின் நிலையம் மற்றும் அந்த வளாகம் முழுவதையும் ரஷ்ய படைகள் தங்களது ராணுவ தளமாக பயன்படுத்தி வருகிறது. அங்கு பல்வேறு ஆயுதங்களையும் குவித்துள்ளது. இந்தப் பகுதியில் இருந்தபடி சுற்றி உள்ள பகுதிகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் அணுசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பயங்கர ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதோடு, 500 ரஷ்ய வீரர்கள் அப்பகுதியில் முகாமிட்டிருப்பதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருவதாகவும் உக்ரைன் அணுசக்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ரஷ்ய வீரர்கள் அப்பகுதியை விட்டு வெளியேறுவதற்கான போதுமான நடவடிக்கைகள் இல்லாததால், உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே சமமான நிலைப்பாட்டை எடுத்து சர்வதேச அணுமின் நிறுவனம் அரசியல் செய்வதாகவும் உக்ரைன் அணுசக்தி நிறுவனம் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications