ரஷ்யா: புரட்சியில் ஈடுபட்ட வாக்னர் படை 'தலை’ பிரிகோஜின் விமான விபத்தில் பலி- சுட்டு வீழ்த்தப்பட்டதா?
மாஸ்கோ: ரஷ்யாவில் அதிபர் புதினுக்கு எதிராக திடீரென கிளர்ச்சியில் ஈடுபட்ட வாக்னர் எனும் கூலிப் படையின் தலைவர் பிரிகோஜின் உட்பட 10 பேர் விமான விபத்தில் பலியானதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
உக்ரைன் நாட்டை ஆக்கிரமிக்கும் வகையில் ரஷ்யா யுத்தம் நடத்தி வருகிறது. ரஷ்யா தமக்காக உக்ரைன் மீது போர்தொடுக்க வாக்னர் எனும் தனியார் ராணுவத்தை- கூலிப் படையை களமிறக்கி இருந்தது. இதன் தலைவர் பிரிகோஜின்.

உக்ரைன் போரில் திடீர் திருப்பமாக, ரஷ்யாவின் முக்கிய நகரங்களை வாக்னர் படை கைப்பற்றி அதிபர் புதினுக்கு அதிர்ச்சி கொடுத்தது. ஒரு கட்டத்தில் தலைநகர் மாஸ்கோ நோக்கி வாக்னர் படை முன்னேற சர்வதேசமும் திடுக்கிட்டுப் போனது. பின்னர் வாக்னர் படையுடன் பெலராஸ் ஏற்பாட்டில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் பிரிகோஜின் கிளர்ச்சியை கைவிட்டார். பின்னர் பெலாரஸுக்கு பிரிகோஜின் நாடு கடத்தபப்ட்டதாகவும் கூறப்பட்டது.

Plane Crashes in Russia's Tver Region pic.twitter.com/IuIlgZ91HZ
— RT (@RT_com) August 23, 2023
இந்நிலையில் பிரிகோஜின் பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளானதாகவும் அதில் பிரிகோஜின் உட்பட 10 பேர் பலியானதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேநேரத்தில் பிரிகோஜின் சென்ற விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னொரு தரப்பு விமான பயணிகள் பட்டியலில் பிரிகோஜின் பெயர் உள்ளது; ஆனால் உயிரிழந்தவர்களில் இன்னமும் பிரிகோஜின் அடையாளம் காணப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
இருப்பினும் வாக்னர் படையை நிறுவியவர்களில் ஒருவரான "Dmitry Utkin", பிரிகோஜின் விமான விபத்தில் பலியானதாக உறுதி செய்திருக்கிறார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications