நவல்னி மரணத்திற்கு நீதி கேட்டு வீதியில் இறங்கும் மக்கள்! போராட்டக்காரர்களுக்கு வார்னிங் கொடுத்த ரஷ்யா
மாஸ்கோ: ரஷ்ய எதிர்க்கட்சித்தலைவர் அலெக்ஸி மரணத்திற்கு நீதி கேட்டு அந்நாட்டில் போராட்டம் வெடித்துள்ளது. இதனால், ரஷ்யாவில் பதற்றமான சூழல் அதிகரித்து வரும் நிலையில், போராட்டக்காரர்களுக்கு ரஷ்ய அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரஷ்ய அதிபராக புதின் இருந்து வருகிறார். சர்வாதிகார போக்குடன் புதின் நடந்து கொள்வதாக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் புதினை கடுமையாக விமர்சித்து வருகின்றன. உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளதால் மேலும் பகையை சம்பாதித்து இருக்கும் புதினுக்கு ரஷ்யாவுக்குள்ளும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அந்த வகையில், புதினை கடுமையாக விமர்சித்து வந்தவர் அலெக்ஸி நவல்னி.

புதினின் செயல்பாடுகள் அவரது சொத்து மதிப்பு என பல்வேறு விஷயங்களிலும் கடுமையாக புதின் விமர்சித்து வந்தார். இந்த நிலையில், ஊழல் முறைகேடு வழக்கில் நவல்னிக்கு 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து 20121 ஆம் ஆண்டு முதல் ஆர்க்டிக் சிறையில் நவ்ல்னி அடைக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில், சிறை வளாகத்தில் நேற்று நடைபயிற்சி சென்ற போது நவல்னி மயங்கி விழுந்து உயிரிழந்து விட்டதாக ரஷ்ய அரசு தெரிவித்தது.
நவல்னி மர்மமான முறையில் மரணம் அடைந்து இருப்பது ரஷ்யா முழுவதிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நவல்னி மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக சமூக வலைத்தளங்களில் ரஷ்ய மக்கள் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். நவல்னி மரணத்திற்கு நீதி கேட்டு சில இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
ஆனால், அடுத்த சில நிமிடங்களில் போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். உடனடியாக எச்சரிக்கை ஒன்றையும் ரஷ்ய அரசு விடுத்துள்ளது. அதில், யாரேனும் வீதியில் இறங்கி போராடினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications