டிரம்பை வெகுவாக பாராட்டி ரஷ்ய அதிபர் புதின்.. உலகமே கைவிட்ட நிலையில் உக்ரைன்.. புதிய சிக்கல்
மாஸ்கோ: ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் தொடங்கி, 4 ஆண்டுகள் ஆகியும், இதுவரை போர் முடிவுக்கு வரவில்லை.. போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் அமைதி திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக டிரம்பை சந்தித்துப் பேச உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று புளோரிடாவுக்கு புறப்பட்டு சென்றார். எனினும் அமைதி தீர்வு எட்டுவதில் உக்ரைன் தலைமை அவசரம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. இது பற்றி எச்சரிக்கை ரஷ்யா அதிபர் புதின், உக்ரைன் அமைதியை விரும்பாவிட்டால், ராணுவ வழிமுறையில் இலக்குகளை அடைவோம் என்றார்.
நேட்டோவில் இணைய முயன்ற உக்ரைன் மீது கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி முதல் ரஷ்யாவின் ராணுவம் கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை நிறுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் எல்லாமே இதுவரையில் தோல்வியில் முடிந்துவிட்டன. இது ஐரோப்பா மறறும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் போரிட்டு வரும் உக்ரைன், தன்னாட்சி பகுகிகளை ரஷ்யாவிடம் இழந்துவிட்டது. சில பகுதிகளை ரஷ்யா உக்ரைனிடம் இருந்து வலுக்கட்டாயமாக பறித்துவிட்டது.

இந்நிலையில் உக்ரைன் ரஷ்யா இடையே போரை முடிவுக்கு கொண்டு வர விரும்பிய அமெரிக்க அதிபர் டிரம்ப், தொடர்ந்து தீவிர பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். அனைத்து ராஜதந்திரங்களையும் அதற்காக டிரம்ப் பயன்படுத்தினார். அதன்படி உருவாக்கப்பட்ட அமைதி ஒப்பந்தத்தை ஏற்பதில் உக்ரைன் தயக்கம் காட்டி வருகிறது. இதனால் அமைதி ஏற்படவில்லை.
இதனால் ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் தொடங்கி, 4 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் அமைதி திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக டிரம்பை சந்தித்துப் பேச உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று புளோரிடாவுக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
அவர்களது சந்திப்புக்கு முன்பு, ரஷிய ராணுவ தளபதி வாலேரி கெராசிமோவ் மற்றும் படைப்பிரிவு தலைவர்களை ரஷிய அதிபர் புதின் சந்தித்தார். போரில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து புதினிடம் அவர்கள் விளக்கம் அளித்தார்கள். அமைதி தீர்வு எட்டுவதில் உக்ரைன் தலைமை அவசரம் காட்டவில்லை என்று புதினும், கெராசிமோவும் கருத்து தெரிவித்தனர்.
பின்னர், ரஷ்யா அதிபர் புதின் கூறுகையில், உக்ரைன் அமைதியை விரும்பாவிட்டால், ராணுவ நடவடிக்கை இலக்குகள் அனைத்தையும் ராணுவ வழிமுறைகளிலேயே ரஷ்யா அடையும். ரஷ்யா-உக்ரைன் எல்லையில் பாதுகாப்பு மண்டலம் அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. டான்பாஸ், ஜபோரோசி ஆகிய பிராந்தியங்களில் ரஷ்ய படைகளுக்கு வெற்றி கிடைத்துள்ளது என்றார். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லவ்ரோவ் ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், ஐரோப்பாவில் எந்த நாட்டையும் தாக்க ரஷ்யா விரும்பவில்லை. ஆனால் எந்த ஐரோப்பிய நாடாவது ரஷியாவை தாக்கினால், அதற்கான எங்கள் பதிலடி பேரழிவாக இருக்கும். அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுக்கும் அமைதி முயற்சிகளை பாராட்டுகிறோம். அமெரிக்க பேச்சுவார்த்தை குழுவுடன் இணைந்து பணியாற்ற உறுதி பூண்டிருக்கிறோம். ஆனால் டிரம்ப் பதவிக்கு வந்த பிறகு, ஐரோப்பா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் அமைதிக்கு தடைக்கல்லாக உருவெடுத்துள்ளன. அந்நாடுகள், ரஷ்யாவுடன் போரிட தயாராவது போல நடந்து கொள்கின்றன" இவ்வாறு தெரிவித்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications