"ஸ்வஸ்திகா!" உக்ரைன் சிறுமிகள் உடல்களில் திடீர் முத்திரை.. என்ன காரணம்? வெளியான ஷாக் படங்கள்
கீவ்: உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வராத சூழலில், ரஷ்ய ராணுவம் குறித்து உக்ரைன் தரப்பில் பரபர குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது கடந்த பிப். இறுதியில் முழு வீச்சிலான போரை ஆரம்பிக்க ரஷ்யா அதிபர் புதின் உத்தரவிட்டார். அதன்படி அனைத்து பகுதிகளில் இருந்து உக்ரைனை ரஷ்யா தாக்கியது.
இந்தப் போர் சுமார் ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்ந்து வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களைக் குறி வைத்து ரஷ்யா தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது.

உக்ரைன் போர்
உக்ரைன் போர் காரணமாக ரஷ்ய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பல ஆயிரம் மக்கள் உக்ரைனில் இருந்து அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். அதேபோல பல லட்சம் மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. போர் தொடங்கிய சில நாட்களிலேயே அமைதி பேச்சுவார்த்தை தொடங்கிய நிலையிலும், அதில் எவ்வித உடன்பாடும் ஏற்படாமல் இருந்தது.

பேச்சுவார்த்தை
இந்தச் சூழலில் கடந்த வாரம் துருக்கியில் இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து உக்ரைனில் இருக்கும் ராணுவத்தை ரஷ்யா குறைத்துக் கொண்டுள்ளது. இருந்த போதிலும், போர் இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. இந்தச் சூழலில் ரஷ்ய வீரர்கள் பல்வேறு போர்க் குற்றங்களைப் புரிந்ததாக உக்ரைன் குற்றஞ்சாட்டி வருகிறது.

சிறுமிகள்
இந்தப் போர் சமயத்தில் ரஷ்ய ராணுவம் பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்டதாக உக்ரைன் சாடி வருகிறது. இந்தச் சூழலில், 10 வயதுக்கும் குறைவான சிறுமிகளைக் கூட ரஷ்ய வீரர்கள் பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் பெண்களின் உடல்களில் தீக்காயங்களை ஏற்படுத்தும் வகையிலான நாஜி முத்திரையைக் குத்தியதாகவும் உக்ரைன் எம்பி லெசியா வாசிலென்க் சாடியுள்ளார். இதனால் பல சிறுமிகளின் உடல் உறுப்புகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

பாலியல் வன்புணர்வு
போரைப் பயன்படுத்திப் பல ரஷ்ய வீரர்கள் உக்ரைன் மக்களிடம் இருந்து கொள்ளையடித்ததாகவும், பல சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் விமர்சித்த லெசியா வாசிலென்க், ரஷ்யாவைக் குற்றங்களின் தேசம் என்றும் சாடினார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "ரஷ்ய வீரர்கள் கொள்ளையடித்தனர். பெண்களை பாலியல் வன்புணர்வு செய்தனர், கொலை கூடச் செய்தனர். 10 வயது சிறுமிக்குக் கூட மலக்குடல் பகுதிகளில் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன.

ஸ்வஸ்திகா முத்திரை
சில சிறுமிகளுக்கு ஸ்வஸ்திகா முத்திரை போன்ற வடிவில் தீக்காயங்களும் உள்ளன. ரஷ்ய ராணுவம் தான் இதைச் செய்துள்ளது" என்று பதிவிட்டுள்ளார். இருப்பினும், இதற்கான காரணங்கள் தெளிவாகத் தெரியவில்லை. பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சில சிறுமிகளின் புகைப்படங்களையும் அவர் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இதைக் கண்டு கோபத்தாலும் பயத்தாலும் வெறுப்பாலும் மனம் செயலிழந்துவிட்டதாகவும் அவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
As they did before in #Chechnya, #Russia massacred civilians in #Ukrainian cities where it was forced to withdraw.
— Clash Report (@clashreport) April 3, 2022
Russia is consciously committing war crimes. pic.twitter.com/KAJGuvNiOF
ரஷ்யா விளக்கம்
அதேநேரம் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை ரஷ்ய ராணுவம் முழுமையாக மறுத்துள்ளது. உக்ரைன் ராணுவத்தில் தளங்களை மட்டுமே குறி வைத்துத் தாக்கியதாகவும் மக்கள் இருக்கும் பகுதிகளில் எவ்வித தாக்குதலையும் நடத்தவில்லை என்றும் ரஷ்யா விளக்கம் அளித்து வருகிறது. இருப்பினும், ரஷ்யாவின் விளக்கத்தை உலக நாடுகள் ஏற்க மறுத்தே வருகின்றன.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications