"சந்தோஷ் நாராயணன்" சர்ச்சை: இந்திய அமைதிப்படை தாக்குதலில் பலியானோருக்கு யாழ். இசை நிகழ்வில் அஞ்சலி!
யாழ்ப்பாணம்: தமிழ் சினிமா இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இலங்கை யாழ்ப்பாணத்தில் நடத்திய இசை நிகழ்ச்சி சர்ச்சையாக வெடித்துள்ளது.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மனைவி இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர். அண்மையில் மனைவியுடன் இலங்கை சென்ற சந்தோஷ் நாராயணன் 'இசை நிகழ்ச்சி'க்காக ஏற்பாடுகளை மேற்கொண்டார். ஆனால் இந்த இசை நிகழ்ச்சி நடத்தப்படும் நாள் பெரும் சர்ச்சையாக வெடித்தது.

இது தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ற கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில், 1987 -ம் ஆண்டு அக்டோபர் 21, 22 ஆகிய தேதிகளில் இந்திய அமைதிப்படை நடத்திய தாக்குதலில் யாழ்ப்பாணம் மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்த நாளை நினைவு கூறுவதை திசை மாற்றவே இசை நிகழ்ச்சி நடத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டி இருந்தனர்.

இதனிடையே திட்டமிட்டபடி சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்ச்சி நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில், கலையும் கலாச்சாரமும் சிறந்து ஓங்கும் இந்த யாழ் மண்ணில் யாழ்கானம் என்ற இந்த இசை நிகழ்ச்சியை அளிப்பதில் சந்தோஷ் நாராயணனும் அவர் குழுவினரும் பெருமகிழ்ச்சி கொள்கின்றனர். இம்மண்ணும் இம்மண்ணில் வாழும் மக்களும் கண்ட துயர்கள் அநேகம். ஒரு வருடத்தின் 365 நாட்களில் எந்த திகதியையும் எடுத்து வரலாற்று ஏடுகளைப் பின்னோக்கி புரட்டினாலும் அத்திகதியில் ஒரு கொடூர சம்பவம் ஒரு துயர்மிகு சம்பவம் நிகழ்ந்திருக்கும். பல தசாப்தங்களாக நடந்த கொடிய யுத்தத்தில் மறைந்த எம் நாட்டு மக்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்திவிட்டு இம்மருந்தை அருந்துவதே பொருத்தமானதாய் இருக்கும். இயலுமானவர்கள் எல்லோரும் எழுந்து ஒருநிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு வேண்டுகிறோம் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்திய அமைதிப் படை தாக்குதலில் உயிரிழந்தோருக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

தங்களது இசை நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு எழுந்ததால் இந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இந்திய ராணுவத்தின் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தியிருப்பது விவாதப் பொருளாகவும் சர்ச்சையாகவும் வெடித்திருக்கிறது சமூக வலைதளங்களில்!.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications