“விட மாட்டோம்” உக்ரைனில் முரண்டு பிடிக்கும் ரஷ்யா! படைகளை குவிக்கும் பகீர் சேட்டிலைட் படங்கள்!
கீவ் : உக்ரைன் நாட்டின் கிழக்கில் உள்ள டான்பாஸ் பகுதியில் ரஷ்யப் படைகள் புதிய தாக்குதலைத் தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில வாரங்களாக அப்பகுதியில் அதிக வீரர்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை ரஷ்யா குவித்துள்ள செயற்கைக்கோள் ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.
பிப்ரவரி 24 அன்று ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்த நிலையில் ரஷ்ய படைகள் இப்போது தலைநகர் கீவ் மற்றும் வடக்கு உக்ரைனில் இருந்து பெலாரஸ் மற்றும் ரஷ்யாவிற்கு முழுமையாக திரும்பப் பெறப்பட்டுள்ளன.
உக்ரைனின் வடக்கு பகுதிகளில் இருந்து வெளியேறியதைத் தொடர்ந்து கிழக்கு உக்ரைனில் ரஷ்யா பெரிய அளவிலான தாக்குதலை தொடங்கியுள்ளது.

ரஷ்யா தீவிரம்
தங்கள் படைகளின் கவனமும் இப்போது டான்பாஸின் முழுமையான விடுதலையில் ஹ்ஜ்என்று ரஷ்ய அதிகாரிகள், கூறியுள்ளனர், இது உக்ரேனின் கிழக்குப் பகுதிகளான டன்பாஸ் மற்றும் லெகன்ஸ்க் ஆகிய பகுதிகளில் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் படையெடுப்பிற்கு முன்னர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இந்நிலையில் சமீப வாரங்களில் டான்பாஸ் பகுதியில் ரஷ்யா தனது துருப்புக்களின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரித்துள்ளது, உக்ரைனின் எல்லையில் படைகள் குவிந்து கிடப்பதை செயற்கைக்கோள் படங்கள் மற்றும் முன்வரிசையை நோக்கி பயணிக்கும் வாகனங்களின் வரிசைகள் காட்டுகின்றன.

உறுதியுடன் உக்ரைன்
உக்ரேனிய அரசு வெளியிட்டுள்ள தகவளின் படி ரஷ்யப் படைகள் டான்பாஸில் 300 மைல் முன்பகுதியில் உக்ரேனிய நிலைகள் மீது குண்டுவீசத் தொடங்கியுள்ளன. ஆனால், உக்ரேனிய பாதுகாப்பு அமைப்புகள் நன்று திட்டமிடப்பட்டு நிறுவப்பட்டுள்ள நிலையில், ரஷ்யா வரும் நாட்களில் "ஒரு பெரிய முன்னேற்றத்தை அடைய வாய்ப்பில்லை" என்று போர் ஆய்வு நிபுணர்கள் கூறுகின்றனர். ரஷ்யப் படைகள் ஆரம்பத்தில் தெற்கு பகுதிகளில் விரைவான வெற்றிகளைப் பெற்றன, அவற்றின் முக்கிய நோக்கம் கிரிமியாவிற்கு இடையே ஒரு நில வழித்தடத்தை உருவாக்குவதாகும்

சிக்கலில் மரியுபோல்
மார்ச் தொடக்கத்தில் இருந்து ரஷ்யப் படைகளால் சுற்றி வளைக்கப்பட்ட துறைமுக நகரமான மரியுபோல் சிக்கலில் உள்ள நிலையில், அங்கு உக்ரேனியர்கள் சரணடைய மறுத்து தொடர்ந்து போராடுகிறார்கள். ரஷ்ய ஆதரவு போராளிகள் அங்கிருக்கும் முக்கிய தொழில்துறை வளாகத்தை தாக்க முயல்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 20,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அப்பகுதி மேயர் கூறியதுடன், நகரத்தின் மீது ரஷ்யாவின் தீவிர ஷெல் தாக்குதலுக்காக போர்க்குற்றங்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளன.

ஏவுகணை தாக்குதல்
மேற்கில், கருங்கடலுக்கு உக்ரைனின் தொடர்பை துண்டிக்கும் நோக்கத்துடன் ரஷ்யா ஒடேசாவை நோக்கி காய் நகர்த்தியது, ஆனால் அவர்களின் முன்னேற்றங்கள் மைகோலைவில் ஸ்தம்பித்தன. இப்பகுதியில் உள்ள உக்ரேனிய துருப்புக்கள் வரும் வாரங்களில் கெர்சன் நகரை மீட்க முயற்சி செய்யலாம் என கூறப்படுகிறது. வியாழன் அன்று, ரஷ்யாவின் கருங்கடல் போர்க்கப்பலான மோஸ்க்வாவை இரண்டு கப்பல் ஏவுகணைகள் மூலம் தாக்கியதாக உக்ரைன் கூறியது, இதனால் கடுமையான சேதம் ஏற்பட்டது.

எச்சரிக்கை நிராகரிப்பு
பின்னர் துறைமுகத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டபோது கப்பல் மூழ்கியது. தீயில் கப்பலில் இருந்த வெடிமருந்துகள் வெடித்ததால் சேதம் ஏற்பட்டதாக ரஷ்யா கூறுகிறது. 510 பணியாளர்களைக் கொண்ட கப்பல் மூழ்கிய நிலையில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் கடற்படைத் தாக்குதலுக்கு வழிவகுத்தது. இது ஒரு முக்கியமான இராணுவ இலக்காக அமைந்தது. இந்நிலையில் போரில் சரணடைய வேண்டும் என்ற ரஷ்யாவின் எச்சரிக்கையை உக்ரைன் நிராகரித்ததும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications