நாட்டுக்கு எதிராக கிளர்ச்சி.. 47 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய சவுதி அரேபியா
சவுதி: வளைகுடா நாடான சவுதி அரேபியாவில் தீவிரவாத குற்றத்திற்காக ஷியா முஸ்லிம் பிரிவின் முக்கியஸ்தர் உட்பட 47 பேர் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
சவுதி அரசின் தொலைக்காட்சி இன்று இத்தகவலை பத்திரிகை குறிப்பு ஒன்றின் மூலம் தெரிவித்தது. நாட்டுக்கு எதிராக தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட குற்றத்திற்காக இவர்கள் கொல்லப்பட்டதாக அந்த செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

சவுதியின் கிழக்கு பகுதியில், ஷியா முஸ்லிம் பிரிவை சேர்ந்த நிம்ர் அல்-நிம்ர் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்களை ஒருங்கிணைத்து போராட்டங்களை நடத்தி வந்தார். அப்போது கிளர்ச்சியாளர்கள், அரசு கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இவருக்கு அல்கொய்தாவுடன் தொடர்புள்ள பரிஸ் பின் ஷ்வெய்ல் உதவி செய்துள்ளார்.
இக்குற்றத்திற்காக இவ்விருவர் உட்பட 47 பேரை கைது செய்தது சவுதி அரசு. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அந்த நாட்டு சுப்ரீம்கோர்ட் இவர்களுக்கு மரண தண்டனையை உறுதி செய்தது. இதையடுத்து இத்தண்டனை தற்போது மொத்தமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
மரண தண்டனை நிறைவேற்றப்படுவதில் முன்னணியில் உள்ள ஒரு நாடு சவுதி அரேபியா என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
