Saudi Arabia: பொறுமைக்கும் எல்லை இருக்கு.. ஈரானை பகிரங்கமாக எச்சரித்த சவுதி! திருப்பியடிக்க முடிவு?
ரியாத்: ஈரான் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், தங்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை இருப்பதாக சவுதி அரேபியா எச்சரித்துள்ளது. ஈரான் தனது யுக்தியை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்.. தேவைப்பட்டால் பயன்படுத்தக்கூடிய அளவுக்கு 'மிக முக்கியமான திறன்களும் சக்திகளும்' சவுதி அரேபியாவுக்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் உள்ளன என்றும் எச்சரித்ததுள்ளது.
ஈரான் அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுப்பதாக கூறி அந்த நாட்டின் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தின. கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியது. ஈரானின் உச்ச தலைவர் அயேதுல்லா அலி கமேனி இந்த போரில் கொல்லப்பட்டார்.

பொறுமைக்கும் எல்லை உண்டு
இதனால், கோபம் அடைந்த ஈரான், இஸ்ரேல் மீதும் வளைகுடா நாட்டில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களையும் கடுமையாக தாக்கி வருகிறது. ஏவுகணைகள், கிளஸ்டர் குண்டுகளை வீசி ஈரான் தக்குதல் நடத்தி வருகிறது. வளைகுடா நடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து தாக்கி வருவதால் மத்திய கிழக்கு முழுவதும் போர் பதற்றம் நீடித்து வருகிறது. பதிலுக்கு அமெரிக்காவும் தாக்குதலை நடத்தி வருகிறது.
ஈரான் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், தங்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை இருப்பதாக சவுதி அரேபியா எச்சரித்துள்ளது. சவுதி அரேபியாவின் ரியாத் நகரை நோக்கி ஈரான் 4 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி தாக்க முயன்றதாகவும் இவற்றை ஏவுகணை தடுப்பு அமைப்பு மூலம் இடை மறித்து அழித்ததாகவும் சவுதி அரேபியா கூறிய நிலையில், தங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு என்று ஈரானை எச்சரித்துள்ளது.
சவுதி அரேபியா குற்றச்சாடு
இது தொடர்பாக சவுதி கூறுகையில், சவுதி மற்றும் பிற வளைகுடா நாடுகளின் பொறுமைக்கும் ஓர் அளவு உள்ளது. இந்த தாக்குதல்கள் வெளிப்படையான மிரட்டல் முயற்சியாகும் என்று சவுதி அரேபியா குற்றம்சாட்டியது. மேலும், ஈரான் தனது யுக்தியை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தேவைப்பட்டால் பயன்படுத்தக்கூடிய அளவுக்கு 'மிக முக்கியமான திறன்களும் சக்திகளும்' சவுதி அரேபியாவுக்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் உள்ளன என்றும் எச்சரித்ததுள்ளது.
-
குவைத் நாட்டில் ஈரானின் வெறியாட்டம்! விமான சேவை மொத்தமாக முடக்கம்.. ஜோர்டானில் மட்டும் 12 ஏவுகணைகள் -
39 முறை பொய் சொன்ன Trump.. முழுக்க முழுக்க மார்க்கெட் மேனிபுலேஷன்? ஈரான் கொடுத்த பதிலடி! -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
ஈரான் போர் முடிவுக்கு வருகிறது! திங்கட்கிழமைக்குள் விடிவுகாலம்.. முதலீட்டுச் சந்தையில் மிகப்பெரிய'ரீசெட்'! -
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
ஈரானை மொத்தமாகக் கைப்பற்றத் திட்டம் போடும் அமெரிக்கா.. டிரம்ப் சொன்ன ஷாக்கான விஷயம்! -
ஈரான்-ஐ துவம்சம் செய்யபோகும் அமெரிக்கா! இன்று இரவே தாக்குதல் டொனால்ட் டிரம்ப் பரபர 'வார்னிங்'! -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
ஈரானுக்கு இனி கெட்ட காலம்.. பீட் ஹெக்செத் பேச்சால் பரபரப்பு..! Hormuz இனி எங்க கண்ட்ரோல்! -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர்












Click it and Unblock the Notifications