பிள்ளைங்க ஸ்கூலுக்கு அதிக லீவ் போட்டுட்டாங்களா.. பெற்றோர்களுக்கு ஜெயில்? பதற வைக்கும் சவுதி அரசு

Subscribe to Oneindia Tamil

ரியாத் : சவுதி அரேபியாவில் உரிய காரணம் இன்றி பள்ளிக் குழந்தைகள் அதிக நாட்கள் லீவ் எடுத்தால் பெற்றோருக்கு சிறை தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் வகையில் விதியை கடுமையாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்று சவுதி அரேபியா. மன்னராட்சி நடைபெற்று வரும் சவுதி அரேபியாவில் சட்ட திட்டங்கள் கடுமையாக இருக்கும். சிறிய குற்றங்களுக்கு கூட மிகக் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் தான், பள்ளி செல்லும் குழந்தைகள் கற்றல் திறன் பாதிப்பு அடையக் கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில் மிகக் கடுமையான சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக சவுதி அரேபிய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

Saudi Parents could face imprisonment if their children absence for School long days, says reports

அதாவது, வரும் கல்வியாண்டு முதல் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில் குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ பெற்றோர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம். உரிய காரணம் இன்றி மாணவர் ஒருவர் 20 நாட்களாக பள்ளிக்கு வரவில்லை என்றால் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

பள்ளி செல்லும் குழந்தை 20 நாட்களாக தகுந்த காரணம் இன்றி லீவ் எடுத்து இருந்தால், அந்த குழந்தையின் பெற்றோரை விசாரணைக்கு உட்படுத்தலாம். இந்த விசாரணை முடிவில், நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு அனுப்பப்படும். மாணவர் நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராமல் இருப்பதில் பெற்றோரின் அலட்சியமே காரணமாக இருப்பது என விசாரணையில் கண்டறியப்படும் பட்சத்தில், நீதிபதி தக்க சிறை தண்டனையை பெற்றோருக்கு விதிப்பார்.

மாணவர்களுக்கு கல்வி கற்கும் உகந்த சூழலை ஏற்படுத்தும் நோக்கத்தில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறதாம். பள்ளியில் மாணவர் 20 நாட்களாக வரவில்லை என்றால் உடனடியாக தண்டனை விதிக்கப்படாது எனவும் இதற்காக பல்வேறு கட்ட லீகல் ஸ்டேஜ் இருப்பதாகவும் சவுதி ஊடகங்களில் வெளியான செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, மாணவர் நீண்ட கால விடுப்பில் இருந்தால் பள்ளி முதல்வர் சம்பந்தப்பட்ட கல்வித்துறையிடம் இது குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும்.

இதனைத் தொடர்ந்து கல்வி அமைச்சகம் இந்த வழக்கு விசாரணையை முன்னெடுத்து செல்லும். குடும்ப நலன் அமைச்சகம் மாணவரிடம் நேரிடியாக வந்து விவரம் கேட்டு பள்ளிக்கு வராததற்கான காரணத்தை கேட்டு தெரிந்து கொள்ளும். இதன்பிறகு, பெற்றோரின் அலட்சியம் இருப்பது தெரியவந்தால் அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படும். அதன்பிறகே இது நீதிமன்றத்திற்கு அனுப்பப்படும்.

பள்ளி மாணவரின் நீண்ட நாள் விடுப்புக்கு தகுதியான காரணம் இருந்தால், இந்த வழக்கு அடுத்த கட்டத்திற்கு அனுப்பப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சவுதி ஊடகங்களில் வெளியான இந்த தகவல்களுக்கு தற்போது கல்வித்துறை அதிகாரிகள் எந்த ஒரு விளக்கத்தையும் கொடுக்கவில்லை. சவுதி அரேபியாவில் கோடை விடுமுறை முடிந்து தற்போதுதான் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. சுமார் 60 லட்சம் மாணவர்கள் இரண்டு மாத கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு திரும்பியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+