ப்பா.. இதுதான் "சல்மான்".. நேரம் பார்த்து அமெரிக்காவிற்கு செக் வைத்த சவுதி.. திக்கி திணறும் பிடன்!
ரியாத்: சர்வதேச அளவில் நிலவும் எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக அமெரிக்கா உலக நாடுகளிடம் கையேந்தும் நிலை வந்துவிட்டது. அதிலும் தற்போது சவுதி அரேபியாவிடம் அமெரிக்கா கொஞ்சி குலாவ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
உக்ரைன் மீதான போர் காரணமாக ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே ரஷ்யா மீது swift தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல் ராணுவ ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வதற்கான தடையும் ரஷ்யா மீது விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் ரஷ்யா பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

உக்ரைன் போர்
இந்த நிலையில் ரஷ்யா போர் காரணமாக சர்வதேச அளவில் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவில் இருந்து வர கூடிய கச்சா எண்ணெய் வரவில்லை. ஐரோப்பாவில் வேகமாக கச்சா எண்ணெய் இருப்பு தீர்ந்து வருகிறது. அதேபோல் மொத்தமாக ரஷ்யா மீது கச்சா எண்ணெய் ஏற்றுமதி தடை போட அமெரிக்கா, ஐரோப்பா திட்டமிட்டு வருகின்றன. இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வளவு
இதனால் சர்வதேச அளவில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் அளவு 140 டாலரை தாண்டி உள்ளது. இன்னும் சில நாட்களில் இது 300 டாலரை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை 200 ரூபாயை தொட்டால் கூட ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. இதனால் அமெரிக்கா தற்போது தனது கையிருப்பில் இருக்கும் எண்ணெயை மார்க்கெட்டில் விட்டு கொஞ்சம் விலையை கட்டுப்படுத்த பார்க்கிறது.

அதிர்ச்சி
இது போக பகையாளி வெனிசுலாவுடன் அமெரிக்கா சமாதானமாக போக முடிவு செய்துள்ளது. அவர்களிடம் கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதுவரையிலான பேச்சுவார்த்தை சுமுகமாக சென்றுள்ளது. அதேபோல் ரஷ்யாவில் இருந்து வரும் கச்சா எண்ணெய் இழப்பை ஈடுகட்ட ஈரானிடமும் அமெரிக்கா கையேந்தும் நிலை சென்றுள்ளது.

பிடன் சவுதி
இந்த எண்ணெய் தட்டுப்பாட்டை சவுதி தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறது. அதன்படி அமெரிக்கா தன்னை சவுதியின் உண்மையான தலைவர் என்று அங்கீகரிக்க வேண்டும், அப்போதுதான் எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்போம் என்று சல்மான் கோரிக்கை விடுத்து இருக்கிறாராம். அதோடு ஏமன் போரில் தன்னுடைய கை ஓங்கவும், தனக்கு சாதகமாக முடிவு வரவும் சவுதிக்கு அமெரிக்கா உதவ வேண்டும் என்றும் கண்டிஷன் போட்டு இருக்கிறாராம்.

ஏன் கோபம்
முன்னதாக சவுதி பத்திரிகையாளர் ஜமால் காசாக்கி கொல்லப்பட்ட வழக்கில் சல்மானின் நேரடி தொடர்பு இருப்பதாக ரிப்போர்ட் வெளியானது . அமெரிக்காவின் இந்த உளவுத்துறை ரிப்போர்ட்டை அதிபர் பிடன் பொதுவில் வெளியிட்டார். இது சல்மானை மிகவும் கோபம் அடைய செய்தது, இதனால் பிடன் - சல்மான் இடையிலான உறவு சுமுகமாக இல்லை. இரண்டு தரப்பும் அதன்பின் சந்திக்கவும் இல்லை.

பிளான்
இந்த நிலையில்தான் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் அதிபர் பிடனுக்கு எதிராக திரும்பி உள்ளது. இதை பிடன் சரியாக கணிக்கவில்லை என்று அமெரிக்க மக்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். அதோடு மினி தேர்தலில் இது பிடனுக்கு எதிராக திரும்பும் வாய்ப்பும் உள்ளது. இதனால் வேறு வழி இல்லாமல் சவுதியுடன் சமாதானமாகி செல்ல பிடன் நினைக்கிறாராம். ஆனால் இதை பயன்படுத்தி ஈரானுக்கு எதிரான ஏமன் போரில் தனது வெற்றியை நிலைநாட்ட சல்மான் முடிவு செய்து இருக்கிறார் என்று கார்டியன் மற்றும் ராய்டர்ஸ் நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications