பூமிக்கு அடியில் மர்ம குகைகள்.. உருவாக்கியது யார்? குழம்பிப்போன விஞ்ஞானிகள்

Subscribe to Oneindia Tamil

ரியோடி ஜெனிரோ: பிரேசில் மற்றும் அர்ஜென்டினாவில் பூமிக்கு அடியில் பிரம்மாண்டமான குகைகள் கண்டறியப்பட்டுள்ளன. வரலாற்றுக்கு முந்தைய காலத்தை சேர்ந்த இந்த குகைகள் மனிதர்களால் உருவாக்கப்பட்டதோ, இயற்கையாக உருவானதோ இல்லை. எனவே குகைகள் குறித்த ஆய்வுகள் தீவிரமடைந்திருக்கின்றன.

இந்தக் குகைகள், புவியியல் பேராசிரியர் ஹென்ரிச் ஃபிராங்க் என்பவரால் முதலில் கண்டறியப்பட்டன. 2018 ஆம் ஆண்டு 'சயின்ஸ் அட்வான்சஸ்' இதழில் வெளியான ஆய்வின்படி மர்ம விலங்குகளால் இந்தக் குகைகள் உருவாக்கப்பட்டிருக்கலாம் என சொல்லப்பட்டிருக்கிறது.

humans earth

சில ஆண்டுகளுக்கு முன்னர், பிரேசிலின் ரியோ கிராண்டே டோ சுல் பிராந்தியத்தில், 600 மீட்டருக்கும் அதிகமான நீளமும், 1.8 மீட்டர் உயரமும் கொண்ட 1,500 க்கும் மேற்பட்ட இந்த குகைகள் கண்டறியப்பட்டன. இந்த குகைகள் நீள்வட்ட குறுக்குவெட்டுடன் கூடிய நீண்ட சுரங்கப்பாதைகளாக இருந்தன. ஆனால் இந்த குகைகளை முதன் முதலில் ஹென்ரிச் ஃபிராங்க் பார்த்தபோது, அவர் சொன்னது இதுதான். "நீள்வட்ட குறுக்குவெட்டுடன் கூடிய நீண்ட சுரங்கப்பாதை குகைகளை இயற்கை ஒருபோதும் உருவாக்காது".

இந்தக் குகைகளின் சுவர்களில் பிரம்மாண்டமான நகக் கீறல்கள் தெளிவாகக் காணப்படுகின்றன. 1.8 மீ உயரத்தில் அரை கி.மீ ஆழத்தில் எந்த விலங்கு குகையை தோண்டும்? யானையை விட அளவில் பெரிய விலங்கு ஏதேனும் இருந்தால்தான் இப்படியான குகைகளை தோண்டி இருக்க முடியும். டைனோசர்கள் யானையை விட பெரிய விலங்குகள்தான். ஆனால் அவை குகைகளை தோண்டியது அதில் வாழ்ந்த உயிரினம் கிடையாது.

மேலும் ஹென்ரிச் கூறுகையில், "நான் பல குகைகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால், இந்தக் குகைகள் எலி, எறும்பு தின்னி போன்ற தோண்டும் விலங்குகளால் உருவாக்கப்பட்டவை அல்ல என்பது தெளிவாகத் தெரிகிறது. குகைகளின் அளவு, வடிவியல் மற்றும் அம்சங்கள் இவற்றை வைத்து பார்க்கும்போது, மண் அரிப்பு அல்லது லாவா பயணித்த பாதை போன்ற புவியியல் செயல்முறைகளால் அவை உருவானவை அல்ல என்பதை உறுதிப்படுத்துகின்றன. மனிதனால் உருவாக்கப்பட்ட எந்த குகையும் இதை ஒத்திருக்கவில்லை" என்று கூறியுள்ளார்.

அப்படி எனில் இந்த குகைகளை உருவாக்கியது யார்? சுமார் 8,000-10,000 ஆண்டுகளுக்கு முன்பு தென் அமெரிக்காவில் வாழ்ந்த ராட்சத விலங்குகளான மெகாத்தீரியம் போன்ற உயிரினங்களால் தோண்டப்பட்டிருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இது பனிக்கரடியை போன்று, அளவில் யானையை விட பெரியதாக இருந்த ஒரு சோம்பேறி விலங்கு. இதற்கு சக்திவாய்ந்த மூட்டுகளும், பெரிய நகங்களும் இருந்தன. எனவே அவை இந்த குகைகளை தோண்டி இருக்க வாய்ப்பு உள்ளது.

2018 ஆம் ஆண்டு 'சயின்ஸ் அட்வான்சஸ்' இதழில் வெளியான ஆய்வு, மனிதர்கள் இந்தக் ராட்சத உயிரினங்களை எதிர்கொண்டது மட்டுமின்றி, அவற்றை வேட்டையாடி இருக்கலாம் எனவும் கூறுகிறது. இந்த குகைகள், ஆதி காலத்தில் மனிதர்களின் பண்புகள் மற்றும் உணவு பட்டியலை அறிந்துக்கொள்ள ஆதாரமாக இருக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+