இந்திய ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கும் பாஜக அரசு: எஸ்டிபிஐ கட்சியின் நிஜாம் முகைதீன் குற்றச்சாட்டு.
குவைத்: குவைத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட எஸ்.டி.பி.ஐ. பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன் இந்தியன் சோஷியல் ஃபோரம் ஏற்பாடு செய்திருந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இந்திய அரசியல் நிலவரம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார்.
இதன் ஒரு பகுதியாக கடந்த 13-11-2015 அன்று தஸ்மா டீச்சர்ஸ் சொசைட்டியில் வைத்து இந்தியன் சோஷியல் ஃபோரம் (ISF) ஏற்பாடு செய்த பொதுகூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

பொதுக்கூட்டம் சரியாக மாலை 5.30 மணிக்கு திரு. அப்துல்லாஹ் ஐ.எஸ்.எப்.-பாஹீல் மண்டல தலைவர் அவர்களின் வரவேற்புரையுடன் ஆரம்பம் ஆனது. அதனை தொடர்ந்து நிகழ்ச்சிக்கு தலைமையேற்ற ஐ.எஸ்.எப்.- தமிழ் பிரிவு தலைவர் திரு. ஷகீல் அஹ்மத் அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினர். தொடர்ச்சியாக திரு. அப்துல் சலாம் ஐ.எஸ்.எப்.-மத்திய கமிட்டி தலைவர் மற்றும் திரு. அம்ஜத் அலி ஐ.எஸ்.எப்.-மத்திய கமிட்டி பொதுச் செயலாளர் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.

அடுத்ததாக மக்களுக்கு அரசியல் செய்திகளை உண்மைத்தன்மையுடன் கொண்டு சேர்க்கும் பணியை இந்தியாவில் செய்து கொண்டிருக்கும் புதிய பாதை என்ற அரசியல் பத்திரிக்கை குவைத்தில் உள்ள தமிழ் பேசும் மக்களுக்கும் தேவை என்று திரு. அப்துர் ரஹ்மான் ஐ.எஸ்.எப்.-சிட்டி மண்டல தலைவர் அவர்கள் விளக்கி கூற அதனை தொடர்ந்து பத்திரிக்கையின் முதல் பிரதியை எஸ்.டி.பி.ஐ.-ன் தமிழ் மாநில பொதுச் செயலாளர் திரு. நிஜாம் முஹைதீன் வெளியிட குவைத்தில் தமிழ் மக்களுக்காக சேவையாற்றும் தொழிலதிபர் மரியாதைக்குரிய டிவிஎஸ் ஹைதர் அலி அவர்கள் பெற்றுக் கொண்டார்கள் மற்றும் குவைத்தில் உள்ள பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சியின் சார்பாகவும் பத்திரிக்கையின் பிரதிகளை பெற்றுக் கொண்டார்கள்.
அதனை தொடர்ந்து நிஜாம் முஹைதீன் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறுகையில்,
தற்போது இந்தியாவில் ஒரு அசாதாரண சூழல் மோடியின் ஆட்சியால் நிலவுகின்றது. பாஜக கடந்த ஒன்றரை வருடங்களாக இந்திய ஜனநாயகத்தை சிதைக்கும் வேலைகளை செய்து கொண்டிருக்கிறது. அதன் விளைவு இன்று சகிப்புத்தன்மைக்கு புகழ் பெற்ற நமது இந்திய நாடு சகிப்புத்தன்மையற்று மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. குறிப்பாக சிறுபான்மை சமுதாயமான முஸ்லிம்கள், தலித்துக்கள், கிறிஸ்தவர்கள், நடுநிலை இந்துக்கள் என்று எல்லோரும் அச்ச உணர்வோடு தான் தங்களது வாழ்நாளை கழிக்க வேண்டிய சூழல் இன்று நிலவுகிறது.

இது போன்ற தேச விரோத சக்திகளிடமிருந்து நமது இந்திய தேசத்தை பாதுகாப்பது இந்தியர்களாகிய ஒவ்வொருவரின் கடமை. இதில் எஸ்.டி.பி.ஐ. கட்சி என்றும் முன்னணியில் நின்று இந்திய மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம், சகிப்புத்தன்மை, உரிமைகள் போன்றவற்றை உறுதி செய்ய போராடிக்கொண்டே இருக்கும். ஏனென்றால் இன்றைய தேவை போராட்ட அரசியல் என்றார்.
இறுதியாக இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் செயல்பாடுகளில் ஆர்வம் கொண்டு நிஜாம் முஹைதீன் முன்னிலையில் ஐந்து நபர்கள் தங்களை ஐ.எஸ்.எப்.- ல் இணைத்துக் கொண்டார்கள்.

தொடர்ச்சியாக இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் செயற்குழு உறுப்பினர் திரு. பரக்கத்துல்லாஹ் அவர்களின் நன்றி உறையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. பாஹீல் மண்டல செயலாளர் திரு. அப்துல் லதீப் அவர்கள் நிகழ்ச்சி முழுவதையும் தொகுத்து வழங்கினார்கள். இந்தியன் சோஷியல் ஃபோரம் தமிழ் பிரிவு செயலாளர் பொறியாளர் முஹம்மது அபூபக்கர் அவர்கள் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக செயலாற்றினார். முன்னூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.












Click it and Unblock the Notifications