For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போராட ஆண் அகதிகளை திருப்பி அனுப்புங்கள்: நியூசி. அமைச்சர்

By Siva
Google Oneindia Tamil News

வெல்லிங்டன்: சிரியாவில் இருந்து அகதிகளாக வரும் ஆண்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பை எதிர்த்து போராட திருப்பி அனுப்புமாறு நியூசிலாந்து அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் தெரிவித்துள்ளார்.

சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அட்டகாசம் செய்து வருகின்றனர். இதனால் சிரியாவைச் சேர்ந்த பலர் நியூசிலாந்திற்கு அகதிகளாக வருகிறார்கள். சட்டவிரோதமாக நியூசிலாந்திற்கு வரும் சிரிய அகதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Send male refugees to fight IS: New Zealand minister

இந்நிலையில் நியூசிலாந்து அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் கூறுகையில்,

சிரியாவில் இருந்து அகதிகள் வந்தால் பெண்கள் மற்றும் குழந்தைகளை ஏற்றுக் கொள்வோம். சில ஆண்களை அவர்களின் நாட்டிற்கு திரும்பிச் சென்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போராடுமாறு கூறுவோம். நாம் எப்படி நம் சுதந்திரத்திற்காக போராடுகிறோமா அது போன்று அவர்களும் போராடட்டும் என்றார்.

அடுத்த இரண்டரை ஆண்டுகளில் 600 கூடுதல் சிரிய அகதிகளை ஏற்றுக் கொள்வதாக நியூசிலாந்து அரசு திங்கட்கிழமை அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A top New Zealand official on Tuesday suggested that New Zealand only accept women and children as refugees and send the men back to fight against the Islamic State (IS) terror group.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X