கனடாவில் கார் தாக்குதலா? மக்கள் கூட்டத்திற்குள் புகுந்த வாகனம்.. பலர் உயிரிழப்பு என தகவல்! ஷாக்
ஒட்டாவா: கனடாவின் வான்கூவரில் பிலிப்பைன்ஸ் பண்பாட்டு நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. இதற்காக மக்கள் கூடியிருந்தனர். சாலையோரத்தில் நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தபோது, திடீரென இந்த கூட்டத்தில் எஸ்யூவி சொகுசு கார் ஒன்று மோதியுள்ளது. கூட்டத்தினர் மீது மோதியதால் பலர் உயிரிழந்திருக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது. கார் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இது பயங்கரவாத செயலா? என்ற கோணத்தில் கனடா போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
கனடாவின் பல்வேறு பகுதிகளிலும் பிலிப்பைண்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள். வான்கூவர் பகுதியிலும் பிலிப்பைன்ஸ் மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் கனடாவின் வான்கூவர் பகுதியில் பிலிப்பைன்ஸ் பண்பாட்டு நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.

கூட்டத்துக்குள் புகுந்த கார்
இந்த நிகழ்ச்சியில் கனடா வாழ் பிலிப்பைன்ஸ் மக்கள், உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள் கலந்துகொண்டனர். சாலையோரத்தில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது திடீரென ஒரு கார் வேகமாக வந்து அங்கிருந்தவர்களை இடித்து தள்ளியபடி சென்றது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கார், கூட்டத்தினர் மீது மோதியது.
கார் மோதி அங்கிருந்தவர்கள் இடித்து தள்ளியபடி சென்றது. இதனால் மக்கள் பதறியடித்துக்கொண்டு ஓடினர். இன்று இரவு 8 மணி அளவில் (உள்ளூர் நேரப்படி) இந்த சம்பவம் நடந்ததாக தகவல்கள் வெளியாகின. மேலும் விபத்தை ஏற்படுத்தியது கருப்பு நிற எஸ் யூ வி சொகுசு கார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக காரை ஓட்டி வந்த டிரைவரை மக்கள் பிடித்தனர். சம்பவம் நடந்த உடனே அங்கு போலீசார் வந்தனர்.
Initial reports of several killed and over a dozen injured, after an SUV plowed into a closed-off street filled with people celebrating the Lapu Lapu Festival in Vancouver, Canada. pic.twitter.com/cLQQPfOMCq
— OSINTdefender (@sentdefender) April 27, 2025
பயங்கரவாத தாக்குதல் சதியா?
போலீசார் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய டிரைவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், விபத்தை ஏற்படுத்திய நபர் ஆசியாவை சேர்ந்த இளம் வாலிபர் என்றும், மன நலம் பாதிக்கப்பட்டவர் என்றும் கூறினர். அவரை உடனடியாக கைது செய்து இது பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இது விபத்து தானா? அல்லது பயங்கரவாத தாக்குதல் சதியா என்பதை போலீசார் உறுதிப்படுத்தவில்லை. இந்த சம்பவத்தில் பலர் உயிரிழந்திருக்க கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. பலர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது பற்றிய முழு விவரம் பின்னர் வெளியிடப்படும் என்று தெரிகிறது.
முன்னதாக இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பரவின. அதில் கார் மோதிச் சென்ற இடத்தில் பொருட்கள் நாலாபுறமும் சிதறிக்கிடப்பது போலவும், போலீசார் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் அதிகளவில் அங்கு குவிந்து இருப்பது போன்ற வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளத்தில் பரவி வருகின்றன.












Click it and Unblock the Notifications