ஷார்ஜாவில் அடுக்குமாடியில் கேரள பெண் அதுல்யா இருந்த கோலம்.. சகோதரிக்கு கடைசியாக அனுப்பிய வீடியோ
சார்ஜா: ஐக்கிய அரபு அமீரகம் நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஷார்ஜாவில் ஏராளமான இந்தியர்கள் வசிக்கிறார்கள். குறிப்பாக கேரளாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் வசிக்கிறார்கள். அந்த வகையில் ஷார்ஜாவில் கேரளாவின் கொல்லம் பகுதியை சேர்ந்த அதுல்யா என்பவர் கணவருடன் வசித்து வந்தார். அதுல்யாவுக்கு ஷார்ஜா ரோலா பார்க் பகுதியில் வேலை கிடைத்திருந்தது. புதிய வேலையில் சேர காத்திருந்தவர் வீட்டில் இருந்த படுக்கை அறையில் கோலம், சக குடியிருப்புவாசிகளை ஆடிப்போக வைத்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் அபுதாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மான், உம்முல் குவைன், ராஸ் அல் கைமா, மற்றும் புஜைரா போன்ற பல்வேறு முக்கிய நகரங்கள் உள்ளன.இதில் அபுதாபி தான் தலைநகரம் ஆகும். துபாய் சுற்றுலா நகரமாகவும், வணிக நகரமாகவும் இருக்கிறது. ஷார்ஜா நகரமும் அதிகமானப்படியான மக்கள் வசிக்கும் முக்கியமான நகரமாகும். துபாய், அபுதாபி போலவே, இங்கு ஏராளமான இந்தியர்கள் வசிக்கிறார்கள்.

அதுல்யா சதீஷ் தம்பதி
இந்நிலையில் கேரளாவின் கொல்லம் பகுதியை சேர்ந்த 30 வயதாகும் அதுல்யாவுக்கு, 40 வயதாகும் சதீஷ் என்பவருடன் 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணமாகி 10 வயதில் பெண் குழந்தை உள்ளது. அந்த குழந்தை அதுல்யாவின் தந்தையுடன் கேரளாவில் தங்கி 5-ம் வகுப்பு படித்து வருகிறார். கணவன்-மனைவி இருவரும் ஷார்ஜா ரோலா பார்க் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 2 ஆண்டுகளாக வசித்து வந்தனர்.
வேலை கிடைத்தது
அதுல்யாவுக்கு சமீபத்தில் அருகில் உள்ள வணிக வளாகத்தில் வேலை கிடைத்திருக்கிறது. அதில் சேருவதற்காக அதுல்யாக ஆவலடன் இருந்தாராம். இந்தநிலையில் கடந்த சனிக்கிழமை காலை அதுல்யாக அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த கோலம் சக குடியிருப்பு வாசிகளை ஆடிப்போக வைத்துள்ளது. மர்மான முறையில் உயிரிழந்து கிடந்தார்.
பிறந்த நாள் கொண்டாட்டம்
அவரது இறப்புக்கு என்ன காரணம் என்று போலீசார் விசாரித்து வருகிறார். அவரது கணவர் மீது சந்தேகம் திரும்பி உள்ளது. ஏனெனில் வெள்ளிக்கிழமை அன்று தான், தனது சகோதரியுடன் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடி உள்ளாராம் அதுல்யா பின்னர், தனது கணவரிடம் வேலைக்கு செல்ல சிறிது பணம் கேட்டாராம். ஆனால் அவரது கணவர் சம்மதிக்கவில்லையாம்.
கணவர் மறுப்பு
அந்த பணத்துக்கு ஈடாக சில தங்க நகைகளை வைத்துக்கொள்ளுமாறு கூறிவிட்டாராம். அதன்பின்னர் அதுல்யாவின் கணவர் சதீஷ் அடுக்குமாடி குடியிருப்பை விட்டு வெளியே சென்றுவிட்டாரராம். அப்போது அதுல்யா வீட்டில் தனியாக இருந்தருக்கிறார்.. கணவர் திரும்பி வரும்போது கதவு திறந்த நிலையில் அவர் இறந்து கிடந்ததாக கேரளாவை சேர்ந்த சமூக பணியாளர் அப்துல்லா காமம்பலம் கூறியிருக்கிறார்.
அதுல்யா அனுப்பிய புகைப்படம்
அண்மையில் இதே ஐக்கிய அரபு அமீரகத்தில் விபஞ்சிகா என்ற கேரள பெண் வரதட்சணை கொடுமையால் வாழ்க்கையை முடித்துக் கொண்ட சம்பவம் நடந்த சில நாட்களில் அதுல்யா இப்படி மர்மமான இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் தான் இறப்பதற்கு முன்னதாக தனக்கு கணவனால் ஏற்பட்ட காயங்கள் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவரது சகோதரிக்கு அனுப்பி வைத்துள்ளார் அதுல்யா. இதையடுத்து அதுல்யாவின் பெற்றோர்கள் வன்கொடுமை செய்து கொன்று விட்டதாக அவரது கணவர் சதீஷ் மீது புகார் அளித்துள்ளனர்.
படுக்கை அறையில் அதுல்யா
ஆனால் சதீஷ் திட்டவட்டமாக மறுத்துள்ளார், அதுல்யா இறந்த நேரம் தான் அஜ்மானுக்கு ஒரு விருந்தில் கலந்துகொள்ள சென்றதாகவும், பலமுறை அதுல்யா செல்போனில் அழைத்தும் தான் எடுக்கவில்லை என்றும், நான் வீட்டிற்கு திரும்பி வந்த பார்த்தபோதுதான் படுக்கையறை அலங்கோலமாக அதுல்யா கிடந்தார் என்றும் சதீஷ் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித் துஷார்ஜா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அதுல்யாவிற்கு என்ன நடந்தது என்று தெரிய வரும் என்பதால், அதற்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications