"வங்கதேச தேர்தலை ரத்து செய்ய வேண்டும்.." வாக்குப்பதிவு முடிந்த கையோடு ஹசீனா வெளியிட்ட பரபர அறிக்கை

Subscribe to Oneindia Tamil

டக்கா: வங்கதேசத்தில் இன்று தேர்தல் நடந்து முடிந்த நிலையில், வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இன்று இரவுக்குள் அங்கு யார் பிரதமர் என்பது தெரிய வரும். இதற்கிடையே இன்று நடந்த தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகச் சாடியுள்ள அந்நாட்டின் மாஜி பிரதமர் ஹசீனா, இந்தத் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

நமது அண்டை நாடான வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆட்சி நடந்து வந்தது. இருப்பினும், 2024ல் அங்கு வெடித்த மக்கள் போராட்டம், அதைத் தொடர்ந்து நடந்த சில விஷயங்களால் அவரது ஆட்சி கலைக்கப்பட்டது. அவர் இப்போது இந்தியாவில் வசித்து வருகிறார். ஹசீனாவை தொடர்ந்து அங்கு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால ஆட்சி நடந்து வந்தது.

Sheikh Hasina Bangladesh election Ex PM Demands Bangladesh Polls Cancelled lists multiple reasons

வங்கதேச தேர்தல்

இந்தச் சூழலில் தான் புதிய அரசைத் தேர்வு செய்ய அங்கு இன்று தேர்தல் நடத்தப்பட்டது. இருப்பினும், இந்தத் தேர்தலில் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்குத் தடை விதிக்கப்பட்டு இருந்தது. வங்கதேச தேர்தல் ஆணையம் அவாமி லீக் கட்சி பதிவை ரத்து செய்ததால், அவர்களால் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டது.

இதற்கிடையே வங்கதேசத்தில் இன்று நடைபெறும் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா வலியுறுத்தியுள்ளார். சட்டவிரோதமான, அரசியலமைப்புக்கு எதிரான இந்தத் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று அன்று வலியுறுத்தினார். மேலும், அவாமி லீக் கட்சி இல்லாமல் நடத்தப்பட்ட இந்தத் தேர்தலை வாக்காளர்கள் நிராகரித்துள்ளதாகவும் சொல்லி அவர்களைப் பாராட்டியுள்ளார்.

பரபர அறிக்கை

வங்கதேசத்தில் வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், ஹசீனா ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் வங்கதேசத்தில் பல்வேறு பகுதிகளிலும், குறிப்பாகத் தலைநகர் டாக்காவில் வாக்காளர் எண்ணிக்கை அசாதாரணமாக அதிகரித்துள்ளதாகவும் இது பல்வேறு கேள்விகளை எழுப்புவதாகவும் தெரிவித்தார். மேலும், இந்தளவுக்கு வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை நம்ப முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

ஷேக் ஹசீனா இது தொடர்பாக மேலும் கூறுகையில், "சட்டவிரோதமான மற்றும் அரசியலமைப்புக்கு முரணான வழிகளில் அதிகாரத்தைக் கைப்பற்றிய யூனுஸால் ஏற்பாடு செய்யப்பட்ட இன்றைய 'தேர்தல்' ஒரு திட்டமிடப்பட்ட நாடகமே. மக்களின் வாக்களிக்கும் உரிமைகள், ஜனநாயக மற்றும் அரசியலமைப்பின் கோட்பாடுகளைப் புறக்கணித்து, அவாமி லீக் இல்லாமல், வாக்காளர்கள் இல்லாமல் ஒரு ஏமாற்றுத் தேர்தல் நடத்தப்பட்டது.

பல்வேறு முறைகேடுகள்

வாக்குப்பதிவு மையங்களைக் கைப்பற்றுதல், துப்பாக்கிச்சூடு, வாக்குகளைப் பெறப் பணம் தருவது என ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்துள்ளது. பிப்ரவரி 12 காலை முதல், நாடு முழுவதும் பெரும்பாலான வாக்குப்பதிவு மையங்களில் வாக்காளர் வருகை மிகவும் குறைவாக இருந்தது. தலைநகர் டாக்கா மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் பல வாக்குப்பதிவு மையங்கள் வாக்காளர்கள் இன்றி வெறிச்சோடிக் கிடந்தன.

தொடர்ச்சியான தாக்குதல்கள், கைதுகள், அச்சுறுத்தல்கள் ஆகியவற்றைக் கொண்டு இந்தத் தேர்தலை நடத்தியுள்ளனர். அவாமி லீக் வாக்காளர்கள், ஆதரவாளர்கள், மற்றும் சிறுபான்மை சமூகத்தினரை வலுக்கட்டாயமாக வாக்குப்பதிவு மையங்களுக்கு அழைத்துச் செல்ல முயற்சிகள் நடந்துள்ளன.

நடுநிலையான தேர்தல் தேவை

எனவே, வாக்காளர்கள் அற்ற, சட்டவிரோதமான மற்றும் அரசியலமைப்புக்கு எதிரான இந்தத் தேர்தலை ரத்து செய்ய வேண்டும். யூனுஸ் ராஜினாமா செய்ய வேண்டும். பொய் வழக்குகளைத் திரும்பப் பெற்று, அனைத்து அரசியல் கைதிகள், ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள், அறிஞர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களை விடுவிக்க வேண்டும். அவாமி லீக் கட்சிக்குத் தேர்தல் நடவடிக்கைகளில் விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும். ஒரு நடுநிலையான இடைக்கால அரசின் கீழ் நியாயமான முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+