Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆப்கான்: தாலிபான் அரசின் அதிபராக இந்திய ராணுவத்திடம் பயிற்சி பெற்ற ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்சாய்?

Subscribe to Oneindia Tamil

காபூல்: தாலிபான்கள் பிடியில் உள்ள ஆப்கானிஸ்தானின் புதிய அதிபராக இந்திய ராணுவத்திடம் பயிற்சி பெற்ற முன்னாள் ராணுவ வீரர் ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்சாய் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recommended Video

    Afghan-ஐ விட்டு வெளியேறுங்க -தாலிபான் | Defense Updates With Nandhini EP02|Oneindia Tamil

    ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் வெளியேறிய நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் தாலிபான்கள் மீண்டும் தலையெடுத்துள்ளனர். தாலிபான்கள் வசம் பெரும்பான்மையான ஆப்கான் மாகாணங்கள் உள்ளன.

    தாலிபான்களுக்கு எதிரான வடக்கு படை முஜாஹிதீன்கள், தாலிபான்களுடன் முன்னர் இணைந்து செயல்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ்.கே ஆகியவையும் சில மாகாணங்களில் வலிமையாக உள்ளன. இதில் ஐ.எஸ்.ஐ.எஸ்.கே அமைப்புதான் காபூலில் இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்தியது. இதில் சுமார் 200 பேர் கொல்லப்பட்டனர்.

    பேச்சுவார்த்தைகள் மும்முரம்

    பேச்சுவார்த்தைகள் மும்முரம்

    இதனிடையே ஆப்கானிஸ்தானில் புதிய அரசாங்கத்தை அமைப்பதில் தாலிபான்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆப்கான் முன்னாள் அதிபர் ஹமித் கர்சாய் உள்ளிட்ட தலைவர்களுடன் தாலிபான்களின் அரசியல் பிரிவு தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும் பஞ்சசீர் மாகாணத்தில் இயங்கி வரும் வடக்கு படை முஜாஹிதீன்களுடனும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

    ஷேர் முகமது அப்பாஸுக்கு வாய்ப்பு?

    ஷேர் முகமது அப்பாஸுக்கு வாய்ப்பு?

    தற்போதைய நிலையில் தாலிபான்களின் முக்கிய தலைவர்கள் 7 பேர் புதிய அதிபராக வாய்ப்பு உள்ளது. இவர்களில் ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்சாய் அல்லது அப்துல்கனி பரதர் பெயர்கள் அதிகம் உச்சரிக்கப்படுகின்றன. ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்சாய் ஆப்கான் ராணுவத்தில் பணியாற்றிய முன்னாள் ராணுவ வீரர். சோவியத் யூனியனின் செம்படைகளுக்கு எதிரான போரில் ஈடுபட்டவர்.

    இந்தியாவில் பயிற்சி பெற்றவர்

    இந்தியாவில் பயிற்சி பெற்றவர்

    அத்துடன் 1982-ல் இந்திய ராணுவத்திடம் பயிற்சி பெற்றவர். ஆம் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சி அகாடமியானது ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு முன்னர் பயிற்சி அளித்தது. அப்படியான பயிற்சி பெற்றவர்களில் ஒருவர்தான் ஷேர் என்கிற ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்சாய். 1982-ம் ஆண்டு டேராடூனில் பயிற்சி எடுத்தவர். தாலிபான்கள் இயக்கத்தின் அரசியல் பிரிவு பொறுப்பாளராக உள்ளார்.

    ஆப்கான் மக்களுக்கு ஆறுதல்

    ஆப்கான் மக்களுக்கு ஆறுதல்

    மேலும் தாலிபான்கள் அமைப்பின் துணைத் தலைவராகவும் உள்ளார். ஆப்கானிஸ்தானின் முந்தைய அரசுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றவர். அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு தாலிபான்கள் சார்பாக பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார் ஷேர் முகமது அப்பாஸ். காபூல் குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களிடையே தொலைக்காட்சி வழியாக உரையாற்றியவர் ஷேர் முகமது அப்பாஸ். ஷேர் முகமது அப்பாஸ் அதிபரானால் அப்துல்கனி பரதர் வெளியுறவுத் துறை அமைச்சராகலாம். ஒருவேளை அப்துல்கனி பரதர் அதிபராகும் நிலையில் ஷேர் முகமது அப்பாஸ், வெளியுறவுத் துறை அமைச்சராகலாம் என்கின்றன காபூல் தகவல்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+