மோடிக்காக "கேஷுவல் லுக்"கிலிருந்து "பார்மலுக்கு" மாறிய சிலிகான் வேலி
சான்ஜோஸ்: வழக்கமாக யார் வந்தாலும் அவர்களை கேஷுவலாக (ஐடி ஸ்டைலில்) வரவேற்கும் சிலிக்கான் வேலி, பிரதமர் நரேந்திர மோடிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்துக் கெளரவித்தது வித்தியாசமாக இருந்தது. இது மோடிக்கு மட்டும் அல்ல, இந்தியாவுக்கும் சேர்த்துக் கொடுக்கப்பட்ட மரியாதையாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சகமே, மோடிக்கான சிவப்புக் கம்பள வரவேற்புக்கு ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவரை எந்தத் தலைவருக்கும் இங்கு "ரெட் கார்பட் வெல்கம்" அளிக்கப்பட்டதில்லையாம்.
5 அடி அகலமும், 30 அடி நீளமும் கொண்ட இந்த சிவப்புக் கம்பளமானது, ஒரு நியூ ஜெர்சி நிறுவனத்தால் சிலிக்கான் வேலிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

ஒரு நாள் முன்பாகவே
பிரதமர் மோடி கலிபோர்னியாவுக்கு வருவதற்கு ஒரு நாள் முன்பு இந்த சிவப்புக் கம்பளம் சான்ஜோஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டது. 33 ஆண்டுகளில் கலிபோர்னியாவுக்கு வந்த முதல் இந்தியப் பிரதமர் மோடிதான். இதனால்தான் அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஹாலிவுட் நடிகரின் பரிந்துரையின் பேரில்
ஹாலிவுட் நடிகரான ஜோ பெஸ்கி என்பவர்தான் இந்த சிவப்புக் கம்பளத்தை தயாரிக்கப் பரிந்துரைத்திருந்தாராம். இதையடுத்து நியூ ஜெர்சி ரக் கம்பெனி என்ற நிறுவனம் இந்தக் கம்பளத்தைத் தயாரித்து அளித்துள்ளது.

டியன்னா டிரியான்
டியன்னா டிரியான் என்பவர்தான் சான் ஜோஸுக்கு வருகை தரும் பிற நாட்டுத் தலைவர்களை வரவேற்கும் பொறுப்பில் உள்ளவராம். இதுவரை மோடிக்குக் கொடுக்கப்பட்ட வரவேற்பு போல வேறு யாருக்கும் கொடுக்கப்பட்டதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

சுறுசுறுப்பான சான் ஜோஸ் விமான நிலையம்
சான்ஜோஸ் விமான நிலையம் பொதுவாக ஐடி மக்களின் கூட்டத்தால் மட்டுமே நிரம்பி வழியும். அமைதியாகவும் காணப்படும். ஆனால் மோடி வருகையால் அந்த விமானம் படு சுறுசுறுப்பாக காணப்பட்டது.

மேலும் பல தலைவர்கள் வருவார்கள்
மோடி வருகையால் ஈர்க்கப்பட்டு பல்வேறு நாட்டுத் தலைவர்களும் இனி அடிக்கடி சிலிக்கான் வேலிக்கு வருவார்கள் என்ற பேச்சும் அங்கு எழுந்துள்ளது என்றால் மோடிக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளலாம்.
-
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications