ஜல்லிக்கட்டுக்காக சிலிக்கன்வேலியில் தமிழர்கள் போராட்டம்: அமெரிக்கர்களும் ஆதரவு
சான் பிரான்சிஸ்கோ: ஜல்லிக்கட்டிற்கு தார்மீக ஆதரவு தெரிவித்து இந்தியா மட்டுமல்லாமல் உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சான்பிராசிஸ்கோ வளைகுடா பகுதி தமிழ் மன்றம் ஜல்லிக்கட்டிற்கு ஆதராவன போராட்டத்திற்கு பொங்கல் நாளன்று சிலிக்கன்வேலியின் பிரிமாண்ட் நகரில் ஏற்பாடு செய்திருந்தது.
தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டின் மீதான தடையை நீக்கக் கோரி ஒருமித்த கருத்து கொண்ட, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு அளிக்கும் அனைத்து தமிழ் நெஞ்சங்களும் குடும்பத்துடன் பங்கேற்று அமைதியான முறையில் ஆதரவை தெரிவிக்க ஒன்று கூடினர்.

மிக குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பெருமளவில் மக்கள் கலந்து கொண்டனர். சிறுவர்கள், பெரியோர் என இருநூறுக்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். அனைவரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதராவான பதாகைகள் பிடித்தும், கோஷங்கள் எழுப்பிய படியும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தின் போது ஜல்லிக்கட்டின் பாரம்பரியத்தையும், அது சங்க காலத்திலிருந்து எவ்வாறு தொடரப்பட்டு வருகிறது என்ற வரலாற்றையும், நாட்டு மாட்டினத்தை காக்க ஜல்லிக்கட்டின் அவசியத்தை பற்றியும் அனைவருக்கும் எடுத்துரைக்கபட்டது. போராட்ட பகுதியில் சென்று கொண்டிருந்த அமெரிக்க மக்களும் ஜல்லிக்கட்டு பற்றி பதாகை மூலமும், நேரிலும் கேட்டறிந்து தங்களது ஆதரவையும் தெரிவித்தனர்.

ஒரு போராட்டம் நடக்கும் போது, அங்கே காரில் செல்பவர்கள் தங்களது காரின் ஹார்ன் ஒலியை எழுப்பி ஆதாரவு கொடுப்பது அமெரிக்க கலாச்சாரம். போராட்டம் நடந்த இடத்தில் தொடர்ந்து ஹார்ன் ஒலி கேட்ட வண்ணம் இருந்தது. குளிர் மற்றும் வீட்டு பொங்கல் திருவிழா கொண்டாட்டம் அனைத்தையும் தாண்டி பெருமளவில் மக்கள் கலந்து கொண்டது உலகில் தமிழர்கள் எங்கு இருந்தாலும் உணர்வுப்பூர்வமாக தமிழர் மரபு காக்க ஒன்றினைவர் என்பதை பரைசாற்றுகிறது.
கடந்த சென்னை வெள்ளத்தின் போதும் வளைகுடாபகுதி மக்கள் பெருமளவில் வளைகுடா பகுதி தமிழ் மன்றம் மூலம் நிதியுதவி அளித்தனர். அதனை கொண்டு பதினைந்திற்கும் மேலான மிக பெரிய வெள்ள நிவாரண திட்டங்கள் சென்னை மட்டும் கடலூரில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications