அமெரிக்காவில் இருந்து சொந்த ஊர் கொண்டு வரப்பட்டது சீனிவாசனின் உடல்
அமெரிக்காவில் இனவெறியரால் சுட்டுக் கொல்லப்பட்ட பொறியாளர் சீனிவாசனின் உடல் அவரது சொந்த ஊரான ஹைதராபாத்துக்கு இன்று கொண்டு வரப்படுகிறது.
Subscribe to Oneindia Tamil
கன்சாஸ்: அமெரிக்காவின் கான்சாஸ் நகரில் வேலை பார்த்து வந்தவர் இந்தியாவின் ஹைதராபாத்தைச் சேர்ந்த பொறியாளர் சீனிவாசன் குச்சிபோதலா (32). இவர் கான்சாஸ் நகரின் புறநகரான ஒலாதே பாரில் கடந்த புதன் கிழமை அமெரிக்காவைச் சேர்ந்த நபர் நடத்திய இனவெறி தாக்குதலால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மேலும் உடன் பணிபுரியும் மற்றொரு பொறியாளர் அலோக் மதசானி மற்றும் அமெரிக்கர் ஒருவரும் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் அமெரிக்க வாழ் இந்தியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கொல்லப்பட்ட சீனிவாசனின் உடல் ஹைதராபாத்துக்கு இன்று கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து அவரது உடல் சொந்த ஊரான பச்சுபள்ளி என்ற இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
அவரது உடலை பார்த்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.












Click it and Unblock the Notifications