அந்த "வீடியோ"வை ஷேர் செய்தால் மரண தண்டனையாமே.. பகீரை கிளப்பிய கிம் ஜோங் உன்.. கதிகலங்கும் வடகொரியா
பியாங்யாங்: போதை பொருட்கள், தென் கொரியாவை சேர்ந்த வீடியோக்கள் மற்றும் மூட நம்பிக்கைகளை பரப்பினால் வடகொரிய அரசு மரண தண்டனை விதிப்பதாக அங்கிருந்து தப்பி வந்த சிலர் கூறியுள்ளனர்.
அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் பெற்றது வடகொரியா. அதேபோல இந்தியா, சீனா, அமெரிக்காவுக்கு அடுத்து சர்வதேச அளவில் சக்திவாய்ந்த நாடாக வட கொரியா இருக்கிறது. வடகொரிய மற்றும் தென் கொரியாவுக்கு என பொதுவாக பௌத்த மதம் இருந்தாலும், வடகொரியா எந்த மதத்தையும் ஊக்குவிப்பதில்லை. அந்நாட்டு அரசு ஒரு மதச்சார்பற்ற நாடாக இருக்கிறது. அதேபோல மக்களும் 64 சதவிகிதத்திற்கும் அதிகமானவர்கள் எந்த மதத்தையும் பின்பற்றுவதில்லை.
மக்கள் இப்படி இருந்தாலும், அரசும் சில கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடகொரியா-தென் கெரியா நாடுகளிடையேயான விவகாரங்களை கையாளும் தென் கொரியாவின் அமைச்சகம்தான் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டிலிருந்து 2020ம் ஆண்டுவரை வடகொரியாவிலிருந்து தப்பி வந்த 500க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த தகவல்களை தென் கொரியா வெளியிட்டுள்ளது

ஐநா அறிக்கை
அதாவது, போதை பொருட்கள், தென் கொரியாவை சேர்ந்த வீடியோக்கள் மற்றும் மூட நம்பிக்கைகளை பரப்பினால் அந்நாட்டு அரசு மரண தண்டனை விதித்திருப்பதாக இவர்கள் கூறியுள்ளனர். ஏற்கெனவே தென் கொரியாவுக்கும் - வட கொரியாவுக்கும் இடையே மோதல் போக்குகள் இருப்பதால் தென் கொரியாவின் அறிக்கையை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர். ஆனால் கடந்த காலங்களில் ஐநா சபை வெளியிட்ட அறிக்கை மற்றும் அரசு சாராத நிறுவனங்கள் வெளியிட்ட அறிக்கையுடன் தென் கொரியாவின் அறிக்கை ஒத்து போய் இருப்பதாக சொல்லப்படுகிறது.

விமர்சனம்
இந்த அறிக்கை தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல், "வடகொரியா ஒரு கொடூரமான நாடு. அங்கு பல மனித உரிமை மீறல்கள் நடக்கின்றன. ஆனால் வெளி உலகத்திற்கு அது சரியாக தெரியாது. இந்த அறிக்கைதான் உலகம் முழுவதும் தென் கொரியாவின் அட்டூழியங்களை வெளிச்சமிட்டு காட்ட வேண்டும். உலக நாடுகள் வட கொரியா மீது பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும். வட கொரியா ஒரு பைசா கூட நிதியுதவி பெற தகுதியற்ற நாடு. இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியிலும் வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. வட கொரியாவால் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல்தான்" என்று கூறியுள்ளார்.

தென்கொரியா
கடந்த காலங்களிலிருந்து தற்போது வரை சுமார் 32 ஆயிரம் வட கொரியர்கள் தென் கொரியாவுக்கு குடியேறியிருக்கிறார்கள். ஆனால் சமீப காலமாக இரு நாடுகளுக்கிடையேயும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த குடியேற்றம் குறைந்திருக்கிறது. அதேபோல வட கொரியாவில் ஊழக்கு மிக கடுமையான தண்டனைகள் அமலில் இருக்கின்றன. சொல்லப்போனால் மரண தண்டனைக்கூட ஊழல் குற்றத்திற்கு விதிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஐரோப்பிய நாடுகளிடையே மோதல் போக்கை கொண்டுள்ளதால் தங்கள் நாட்டுக்கு எதிராக தொடர்ந்து போலியான செய்திகள் பரப்பப்படுவதாக வட கொரிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

அணு ஆயுதம்
மட்டுமல்லாது சமீப கலமாக தென் கொரியா அமெரிக்காவுடன் சேர்ந்து ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு வருவதால் வட கொரிய அரசு அணு ஆயுதங்கள் பக்கம் திரும்பி இருக்கிறது. அணு ஆயுதங்கள் சர்வதேச அளவில் ஒழிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் வட கொரியாவின் நடவடிக்கைகள் சர்வதேச அளவில் விமர்சிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications