ஆசை ஆசையா ஹோட்டலில் ரூம் போட்ட அழகி.. காரணமே வேற போல.. அதென்ன "ரகசிய அறை".. 13 கோடியா? சிக்கிய ஜோடி
ஹோட்டல் ரூமில் ஒயின் பாட்டில்களை திருடிய காதல் ஜோடிக்கு தண்டனை தரப்பட்டுள்ளது
மாட்ரிட்: சர்வதேச அளவில் நடந்த கிரிமினல் வழக்கு ஒன்றில், பரபரப்பு தீர்ப்பு தரப்பட்டுள்ளது.. இந்த தண்டனையை பெற்ற அந்த காதல் ஜோடி, கலங்கி போய் விழித்து கொண்டிருக்கிறது.
ஸ்பெயின் நாட்டின் தென்மேற்கு பகுதியில் கேசர்ஸ் என்ற நகரம் உள்ளது.. அந்த நகரத்தில் ஒரு ஸ்டார் ஓட்டல் இயங்கி வருகிறது.. இந்த ஓட்டல் மிகவும் பிரபலமானதும்கூட.
இதற்கு காரணம், பழங்கால ஒயின்கள் இங்கு பாதுகாத்து வைக்கப்பட்டிருப்பதுதான்.. அதாவது, 19-ம் நூற்றாண்டில் தயாரிக்கப்பட்ட 'ஒயின்' மதுபான பாட்டில் உள்பட இன்னும் ஏராளமான ஒயின் பாட்டில்கள் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன..

ஸ்டார் ஹோட்டல்
எல்லாமே பழமையான மதுபான வகைகள்தான்.. இவைகளின் மதிப்பு கிட்டத்தட்ட 13 கோடி மதிப்பு இருக்கும் என்கிறார்கள்.. இந்த மதுபான பாட்டில்களை பாதுகாத்து வைப்பதற்காகவே ஒரு ரகசிய அறையும் உள்ளதாம்.. இதற்கென்று தனியாக செக்யூரிட்டிகளும் உண்டு.. அதனால்தான், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்த ஸ்டார் ஓட்டல் கருதப்படுகிறது.. இந்நிலையில், இந்த ஹோட்டலுக்கு பிரிசிலா லாரா குவேரா என்ற இளம் பெண் வந்துள்ளார்.. இவர் மெக்சிகோ நாட்டின் முன்னாள் அழகி ஆவார்.. தன்னுடைய காதலர் கான்ஸ்டன்டின் கேப்ரியல் டுமித் என்பவரை இந்த ஓட்டலுக்கு அழைத்து வந்தார்.

பிளான்கள்
இந்த பெண் இங்கு வருவதற்கு காரணமே எப்படியாவது அந்த பழமையான ஒயின் பாட்டில்களை திருடி கொண்டு போக வேண்டும் என்பதுதான்.. அதற்காக தன்னுடைய காதலனுடன் சேர்ந்து நிறைய பிளான்களை போட்டிருக்கிறார்.. எனினும், ஒயின்பாட்டில்கள் எல்லாம் ஓட்டலின் ரிசப்ஷன் பகுதியிலேயே பாதுகாப்பாக இருக்கவும், அவைகளை உடனடியாக திருடி கொண்டு போக முடியவில்லை. அதனால், மறுபடியும் மறுபடியும் இதே ஓட்டலில் வந்து தங்கியிருந்தார்.. இதற்காகவே 3 முறை காதலனுடன் வந்து, பாட்டில்களை எப்படி திருடுவது என்று ரிகர்சலும் பார்த்துள்ளார்.. கடைசியாக, கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அந்த ஓட்டலுக்கு பிரிசிலாவும், அவரது காதலரும் சென்று ரூம் எடுத்து தங்கியிருக்கிறார்கள்.

ரிசப்ஷன்
அன்றைய தினம் நள்ளிரவு, தன்னுடைய ரூமில் இருந்து ரிசப்ஷனுக்கு சென்றுள்ளார் பிரிசிலா.. அங்கேயிருந்த ஒரு ஊழியரிடம், தனக்கு சாப்பாடு வேண்டும் என்று கேட்டு, சில உணவுகளை கூறி, அவைகளை சமைத்து கொண்டு வர சொன்னார்.. முதலில் இவைகளை சமைத்து தர அந்த ஊழியர் மறுத்துவிட்டார்.. பிறகு, சமைத்து தருவதாக சொல்லி கிச்சனுக்கு சென்றுவிட்டார்.. அந்த நேரத்தில் ரிசப்ஷனில் வேறு யாருமே இல்லை.. இதுதான் சமயம் என்று நினைத்த பிரிசிலா, மதுபாட்டில்கள் வைக்கப்பட்டிருந்த ரகசிய ரூம் சாவியை எடுத்துக்கொண்டு அங்கு சென்றார்.. ஆனால் அப்போதுதான் தெரிந்தது, அவசரத்தில் தவறான சாவியை எடுத்து வந்துவிட்டார்.. அதனால், மறுபடியும் ரிசப்ஷனுக்கு வந்தார்.. அதற்குள் அந்த ஊழியர் சாப்பாட்டை எடுத்து வந்துவிட்டார்.

கரெக்ட் டைமிங்
இதனால் என்ன செய்வதென்று விழித்த பிரிசிலா, தன்னுடைய காதலனுக்கு சிக்னல் காட்டினார். உடனே அந்த காதலர், தனக்கும் சாப்பாடு வேண்டும் என்று ஊழியரிடம் கனிவாக பேசினார். அதனால், அந்த ஊழியர் மறுபடியும் கிச்சனுக்கு சென்றுவிட்டார். இந்த நேரத்தில் சரியான சாவியை எடுத்துக்கொண்டு ரகசிய அறைக்கு சென்றார் பிரிசிலா. அங்கிருந்த ரூ.13 கோடி மதிப்புடைய 45 மதுபாட்டில்களை எடுத்து, ஒரு பெரிய பையில் போட்டுக்கொண்டு, தன்னுடைய ரூமுக்கு அவசர அவசரமாக ஓடினார்.. பிறகு, காலையில், எதுவும் நடக்காததுபோல் 2 பேரும், ஓட்டல் ரூமை காலி செய்துவிட்டு கிளம்பி போய்விட்டார்கள்..

எஸ்கேப் ஜோடி
இதனிடையே வழக்கம்போல் மதுபாட்டில்களை சரிபார்ப்பதற்காக ஊழியர்கள் ரகசிய ரூமுக்கு சென்றபோதுதான், மதுபாட்டில்கள் திருடுபோனது தெரியவந்தது.. உடனே ஓட்டலில் இருந்த சிசிடிவி கேமராவை பார்த்தபோதுதான், இந்த காதல் ஜோடியின் லீலைகள் அரங்கேறியதை பார்த்து அதிர்ந்து போனார்கள்.. உடனடியாக போலீசுக்கு தகவல் தரப்பட்டது.. ஆனால், அதற்குள் இந்த காதல் ஜோடி எஸ்கேப் ஆகி, நாட்டை விட்டே ஓடிப்போய்விட்டார்கள்.. இந்த திருட்டு சம்பவம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.. சர்வதேச பத்திரிகைகளிலும் வெளியாகியிருந்தது..

அரங்கேற்றம்
இந்த ஜோடி எங்கே போனது என்றே தெரியவில்லை.. இவர்களை கண்டுபிடிக்க சர்வதேச நாடுகளின் உதவியுடன் ஸ்பெயின் தேட ஆரம்பித்தது.. கடைசியில், கடந்த வருடம் ஜூலை மாதம் குரேஷியாவில் 2 பேருமே கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஸ்பெயினுக்கு நாடு கடத்தப்பட்டு, வழக்கு விசாரணையையும் எதிர்கொண்டனர்... இந்த வழக்கில்தான் நேற்றைய தினம் தீர்ப்பு தரப்பட்டுள்ளது.. அந்த தீர்ப்பின்படி, பிரிசிலாவுக்கு 4 வருடமும், காதலருக்கு நான்கரை ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.. அதுமட்டுமல்ல, அந்த ஓட்டலுக்கு ரூ.ஆறரை கோடி ரூபாய், இந்த ஜோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications