இலங்கையில் உளவு கப்பல்- எந்த நாட்டுக்கும் பாதிப்பும் இல்லை- பிற நாடுகள் தலையிட கூடாது: சீனா வார்னிங்
பெய்ஜிங்: இலங்கையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ள தங்களது நாட்டின் யுவான் வாங்-5 கப்பலால் எந்த ஒரு நாட்டுக்கும் பாதிப்பும் இல்லை; இந்த விவகாரத்தில் பிற நாடுகள் தலையிடவும் கூடாது என சீனா வெளியுறவுத் துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
Recommended Video
சீனாவின் யுவான் வாங்- 5 என்பது செயற்கைக் கோள் கண்காணிப்பு கப்பல். ஆகையால் ரேடார் உள்ளிட்ட பல்வேறு அதிநவீன கருவிகளுடன் இந்த கப்பல் இலங்கையின் அம்பாந்தோட்டா துறைமுகத்துக்கு எரிபொருள் நிரப்புவதற்காக வந்துள்ளது என்பது இலங்கை, சீனாவின் கருத்து.
ஆனால் யுவான் வாங்-5 என்கிற சீனாவின் கப்பலானது, உளவு கப்பலாகும். இந்தியாவின் தென் எல்லை தொடங்குகிற தமிழ்நாட்டில் இருந்து 150 கி.மீ தொலைவில் தான் அம்பாந்தோட்டா துறைமுகம் உள்ளது. சீனாவின் உளவு கப்பலானது சுமார் 750 கி.மீ தொலைவு வரை உளவு பார்க்கக் கூடியது. அதற்கான நவீன கருவிகள்தான் இந்த உளவு கப்பலில் இருக்கிறது என்பது இந்தியாவின் கருத்து.

சீனாவின் உளவு கப்பலானது தென்னிந்தியாவில் உள்ள பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை எளிதாக கண்காணிக்க முடியும்; குறிப்பாக ஒடிஷாவின் ஏவுகணை தளம், தமிழகத்தின் அணுமின் நிலையங்கள் உள்ளிட்டவைகளை சீனாவால் இந்த கப்பலில் இருந்து உளவு பார்க்கலாம் என்கிற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. இதனால்தான் சீனாவின் யுவான்வாங்-5 கப்பலை இலங்கைக்குள் அனுமதிக்கவே கூடாது என்றது இந்தியா.
இருந்தபோதும் சீனாவுக்கு இலங்கை அனுமதி கொடுத்துள்ளது. தற்போது இலங்கையின் அம்பாந்தோட்டா துறைமுகத்தில் சீனாவின் யுவான்வாங்-5 உளவு கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில், யுவான் வாங்-5 ஆய்வுக் கப்பலின் கடல் ஆய்வு நிகழ்ச்சி சர்வதேசச் சட்டம் மற்றும் சர்வதேச நடைமுறைகளுக்கு உட்பட்டதுதான். அதே நேரத்தில் எந்த ஒரு நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலனையும் யுவான் வாங்-5 கப்பலின் பயணம் பாதிக்காது. அத்துடன், பிற நாடுகள் இந்நிகழ்ச்சியில் தலையிடக்கூடாது என்றார்.
இலங்கைக்கான சீனாவின் தூதர் ஷி ஜென்ஹாங் கூறுகையில், இத்தகைய ஆய்வு கப்பல்கள் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்வது இயல்பானதுதான். 2014-ம் ஆண்டிலும் கூட இத்தகைய கப்பல் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்த ஆய்வுக் கப்பலை அனுப்பி வைத்திருப்பதில் எந்த உள்நோக்கம், சதி இல்லை என்றார்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications