இலங்கை ஜனாதிபதி தேர்தல்: தமிழர் மாவட்டங்களில் ஓட்டுகளை அதிகம் வாங்கிய வேட்பாளர் யார்?

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வேட்பாளரான அனுர குமார திசநாயக்க முன்னிலை வகித்து வருகிறார். தமிழர் பகுதிகளில் இதுவரை முடிவுகள் வெளியான திருகோணமலை, வன்னி மாவட்டங்களில் அனுர குமார, சஜித் பிரேமதாச அதிகமான வாக்குகளப் பெற்றுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஈழத் தமிழ் பொது வேட்பாளர் அரியநேந்திரன் முதலிடம் பெற்றுள்ளார். மட்டக்களப்பில் ரணில் விக்கிரமசிங்கே அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் வாக்கு எண்ணும் பணி நேற்று இரவு 9 மணிக்கு தொடங்கியது. இன்று அதிகாலை 12 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அனுர குமார திசநாயக்க முன்னிலையில் இருந்து வருகிறார். தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இடையே 2-வது இடத்துக்கு கடும் போட்டி நிலவுகிறது.

sri lanka presidential election 2024 sri lanka election

தமிழர் பகுதிகளான திருகோணமலை மற்றும் வன்னி தபால் ஓட்டுகள் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

திருகோணமலை:

அனுர குமார திசநாயக்க- 5480
சஜித் பிரேமதாச - 4537
ரணில் விக்ரமசிங்கே- 3630
அரியநேந்திரன் - 431
நாமல் ராஜபக்சே -129

வன்னி மாவட்டம்

சஜித் பிரேமதாச - 4,899
ரணில் விக்ரமசிங்க- 4,257
அனுர குமார திசநாயக்க- 2,092
அரியநேந்திரன்- 1,160
நாமல் ராஜபக்சே- 68

யாழ்ப்பாண மாவட்ட தபால் ஓட்டுகள் விவரம்:

அரியநேந்திரன் - 10,097
ரணில் விக்கிரமசிங்கே- 8,804
சஜித் பிரேமதாச- 7,464
அனுர குமார திசநாயக்க-3,835
நாமல் ராஜபக்சே- 76
சரத் பொன்சேகா- 60

மட்டக்களப்பு மாவட்டம்

ரணில் விக்கிரமசிங்கே-5967
சஜித் பிரேமதாச 3205
அனுர குமார திசநாயக்க 2479
அரியநேந்திரன் 901

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+