ஈழத் தமிழரால் நிராகரிக்கப்பட்டவரே ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க- 40% வாக்குகள் பெற்ற சஜித் பிரேமதாச!
கொழும்பு: இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபி எனும் சிங்களப் பேரினவாதி கட்சியின் தலைவர் அனுர குமார திசநாயக்க (அநுர குமார திஸாநாயக்க) வெற்றி பெற்றதாக அதிகாரப்பூரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஈழத் தமிழரின் தாயக நிலப்பரப்பான வடக்கு கிழக்கில் எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசவுக்குதான் 40% பேர் வாக்களித்துள்ளனர். அதாவது ஈழத் தமிழரால் நிராகரிக்கப்பட்ட அனுர குமார திசநாயக்கதான் இலங்கையின் புதிய ஜனாதிபதியாகி இருக்கிறார்.
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் முதல் முறையாக 7 தமிழ் அரசியல் கட்சிகள் இணைந்து தமிழ் பொதுவேட்பாளராக அரியநேந்திரன் எனும் அரியநேத்திரனை களமிறக்கின. ஆனால் அரியநேந்திரனின் தமிழரசுக் கட்சியே அவரைக் கைவிட்டது. தமிழரசுக் கட்சி, எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசவை ஆதரித்தது.

இலங்கையில் நேற்று முன்தினம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் இரவே எண்ணப்பட்டு அதிகாலை 12 மணி முதல் முடிவுகள் வெளியாகின. இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் பல மணிநேரமாக ஜேவிபி தலைவரான அனுர குமார திசநாயக்கதான் 50%-க்கும் அதிகமான வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். ஆனால் தமிழ் மக்களின் வடக்கு கிழக்கு மாகாண வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியான போது இலங்கையின் அரசியல் வரலாற்றில் புதிய திருப்பம் ஏற்பட்டது.
முன்னணியில் இருந்த அனுர குமார திசநாயக்கவுக்கும் சஜித் பிரேமதாசவுக்கும் இடையேயான வாக்கு சதவீதம் வெகுவாகவே குறைந்தது. இதனால் அனுர குமார திசநாயக்கவால் 50%-க்கும் அதிகமான வாக்குகளைப் பெற முடியாமல் போனது. இதனையடுத்து இலங்கை ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக 2-வது விருப்பு வாக்குகள் அடிப்படையில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. இதன் முடிவில் அனுர குமார திசநாயக்க இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
இருந்த போதும், இலங்கை தமிழரின் (ஈழத் தமிழரின்) தாயக நிலப்பரப்பான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அனுர குமார திசநாயக்கவுக்கு சொற்பமான வாக்குகள்தான் கிடைத்தன. வடக்கு கிழக்கு மாகாணங்களில் எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசவுக்குதான் 40% வாக்குகள் கிடைத்தன. தமிழரசு கட்சி விடுத்த வேண்டுகோளை ஏற்று ஈழத் தமிழர்கள், சஜித் பிரேமதாசவுக்கே வாக்களித்திருக்கின்றனர். ஈழத் தமிழரின் பொதுவேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட அரியநேந்திரனும் கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஈழத் தமிழர் பொதுவேட்பாளராக அரியநேந்திரன் களமிறக்கப்படாமல் இருந்திருந்தால் தமிழர் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் ஒட்டுமொத்தமாக சஜித் பிரேமதாசவுக்கு கிடைத்திருக்கும்; அனுர குமார திசநாயக்கவின் வெற்றியும் கேள்விக்குறியாகி இருக்கும்.
இப்போதும் இலங்கை தேசம் இரண்டாகத்தான் பிளவுபட்டு நிற்கிறது. சிங்களர் தரப்பு, அனுர குமார திசநாயக்கவையும் தமிழர் தரப்பு சஜித் பிரேமதாசவையும் ஆதரிக்கிறது. அதாவது ஈழத் தமிழரால் நிராகரிக்கப்பட்டவரே இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க என்பது விசித்திரமானதுதான்.
அனுர குமார திசநாயக்க, ஜேவிபி எனும் சிங்களப் பேரினவாத கட்சியின் தலைவர். இலங்கையில் ஈழத் தமிழருக்கு அதிகாரப் பகிர்வு என்ற சிந்தனையையே நிராகரிப்பவர். இலங்கையில் ஒற்றையாட்சிதான் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக நிற்பவர். ஜேவிபியின் தலைவர் அனுர குமார திசநாயக்க, ஜனாதிபதியாக இருக்கும் நாட்டில் ஈழத் தமிழருக்கு கிஞ்சித்தும் அதிகாரம் கிடைக்காது; கடந்த கால இன அழித்தொழிப்பு நடவடிக்கைகள் தலைதூக்காமல் இருந்தாலே போதும் என்கிற அச்சம் ஈழத் தமிழரிடத்தில் எழுந்துள்ளது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications